- Home
- Cinema
- தொலைக்காட்சி
- 'காலில் கூட விழுகிறேன்.. பணத்தை கொடு! - கதறும் ஆனந்தி; சிங்கப்பெண்ணே தொடரில் நிலவும் உச்சக்கட்ட பரபரப்பு
'காலில் கூட விழுகிறேன்.. பணத்தை கொடு! - கதறும் ஆனந்தி; சிங்கப்பெண்ணே தொடரில் நிலவும் உச்சக்கட்ட பரபரப்பு
சிங்கப்பெண்ணே தொடரில் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு உருக்கமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனந்தி இவ்வளவு தூரம் இறங்கி வந்து கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Singappenne Serial Today Episode Promo
சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' தொடர் தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ஆனந்தி தன் குடும்பத்திற்காகச் செய்யும் தியாகங்களும், அவளுக்குத் தெரியாமல் பின்னணியில் நடக்கும் சூழ்ச்சிகளும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றன. இன்றைய நாளுக்கான புரோமோவில், பணம் தொடர்பான ஒரு பெரிய உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதால் பரபரப்பு நிலவிகிறது.
Sun TV singappenne Latest Episode,
புரோமோவின் தொடக்கத்தில், ஆனந்தி. ” உன்னை கையை எடுத்துக் கும்பிட்டுக் கேட்டு கொள்கிறேன் பணத்தைக் கொடுத்துவிடு, தேவையென்றால் காலில் கூட விழுகிறேன்" என்று கூறுகிறார். மற்றொரு புறம் ஆனந்தியின் அப்பா மற்றும் அம்மா இடையே நடக்கும் உரையாடல் கதையில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறது.
singappenne Serial Review
ஆனந்தி தன் உழைப்பில் கிடைத்த பணத்தை ஊருக்கு அப்பாவிற்கு அனுப்பவது வழக்கம் என்பதால் அதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மறுபக்கம் ஆனந்தியின் அக்காவிடம், அன்பு வந்து மாமாவிற்கு அனுப்பிய பணத்தை கொடுக்கிறார்.
Sun TV singappenne
அதற்கு கோகிலா, "ஆனந்தி பணம் அனுப்பச் சொல்லி நான் எதுவும் அனுப்பவில்லையே" என்று மிகவும் சாதாரணமாக கூறுகிறார். இதைக் கேட்டதும் அன்பு மிகவும் பேரதிர்ச்சி அடைகின்றனர். மேலும் ஆனந்தி காலையில் கிளம்பும் போது சரியாக இல்லை என்பதை உணர்ந்து, துளசி தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.
Anandhi vs Thulasi
ஆனந்தி தன் குடும்பத்தின் கஷ்டத்திற்காகப் பார்த்துப் பார்த்துச் சேர்க்கும் பணம் எங்கே போனது? இந்தப் பணப் பிரச்னை ஆனந்தியின் குடும்பத்தில் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும், ஆனந்தி இந்தச் சிக்கலை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பதையும் இன்றைய எபிசோடில் காணலாம்.