Vivo V27 launch in India: இந்தியாவில் Vivo V27 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
Vivo V27 தொடர் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. Vivo V27 launch in India. V27 சீரிஸின் கீழ் இரண்டு போன்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ நிறுவனம் இந்தியாவில் Vivo V27 ஸ்மார்ட்போனை இன்று மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்கிறது. Vivo V27, Vivo V27 Pro என இரண்டு ஸ்மார்ட்போன்கள் வர வாய்ப்புள்ளது. Vivo 27e எனப்படும் மற்றொரு மாடலும் உள்ளது. ஆனால், அதுகுறித்த தெளிவான விவரங்கள் இல்லை. வாடிக்கையாளர்கள் விவோ வி27 சீரிஸ் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட், ஷோரூம்கள், மொபைல் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். அறிமுக நிகழ்வு விவோ யூடியூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.
Vivo V27 சீரிஸ்: நேரலை வீடியோவை பார்ப்பது எப்படி?
Vivo V27 சீரிஸ் ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வை நீங்கள் பார்க்க விரும்பினால், விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் மூலமாக பார்க்கலாம். இன்றைய அறிமுக நிகழ்வில் மொத்தம் எத்தனை ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை. இருப்பினும் Vivo V27, Vivo 27 Pro மற்றும் Vivo V27 e உள்ளிட்ட மூன்று சாதனங்களை வெளியிடுவதாக தெரிகிறது.
Vivo V27 சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலை என்னவாக இருக்கும்? விலை
விவோ வெப்சைட்டில் வந்துள்ள விளம்பரங்களை வைத்து பார்க்கும் போது, Vivo V27 ஸ்மாரட்போனில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி இருக்கும். எனவே, அது சுமார் ரூ. 32,000 என்ற விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், Vivo V27 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ.38,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12ஜிபி ரேம் மாடல் அறிமுகப்படுத்தினால் அது ரூ.40,000 விலையை தாண்டியிருக்கும்.
அறிமுக நிகழ்வை முன்னிட்டு இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், Flipkart, வெளிக்கடைகள் மூலமாகவும் வாங்குவதற்கு கிடைக்கும்.இந்த வார இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pixel 6a போனுக்கு நிகரான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் Vivo V27!
Vivo V27 சீரிஸ் ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள்:
வரவிருக்கும் விவோ வி27 ப்ரோ ஸ்மார்ட்போனில் பெரிய அளவில், அதாவது 6.78 இன்ச் திரை, FHD டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும். டிஸ்ப்ளே கார்னர் வளைந்த டிசைனில் இருக்கும். இந்த போன் திறன்வாய்ந்த மீடியாடெக் டிமன்சிட்டி 8200 பிராசசர் இருப்பதால் செயல்திறன் மிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, Vivo V27 Pro போனில் OIS தொழில்நுட்பத்துடன் கூடிய 50MP பிரைமரி கேமரா இருக்கும். கூடுதலாக, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்கான 50MP கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இறுதியாக, USB டைப்-சி போர்ட் 66W வரை ஃபாஸ்ட் சார்ஜ் செய்வதற்கான வசதி, 4,600mAh பேட்டரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது