MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • 2025 புத்தாண்டு ரீசார்ஜ் கொண்டாட்டம்! ஜியோவின் நியூ இயர் வெல்கம் பிளான்!

2025 புத்தாண்டு ரீசார்ஜ் கொண்டாட்டம்! ஜியோவின் நியூ இயர் வெல்கம் பிளான்!

2025 புத்தாண்டில் ரிலையன்ஸ் ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தாண்டு வரவேற்புத் திட்டம் என அழைக்கப்படும், புதிய ரீசார்ஜ் பிளான் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், அன்லிமிடெட் 5G டேட்டா ஆகியவற்றைப் பெறமுடியும்

2 Min read
SG Balan
Published : Dec 11 2024, 10:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Reliance Jio Launches 2025 New Year Welcome Plan Benefits

Reliance Jio Launches 2025 New Year Welcome Plan Benefits

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய 2025 ரூபாய் திட்டம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஜியோவுடன் இணைந்த இணையதளங்களில் இருந்து ரூ.2,150 மதிப்பிலான பலன்களை அளிக்கும் வவுச்சர்கள் மற்றும் கூப்பன்களையும் இலவசமாகப் பெறலாம் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது.

27
Jio 2025 New Year Plan Validity

Jio 2025 New Year Plan Validity

ரிலையன்ஸ் ஜியோவின் நியூ இயர் வெல்கம் பிளான் (Reliance Jio New Year Welcome Plan) ரூ.2025க்கு கிடைக்கிறது. இது 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்டு திட்டம் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 5G இன்டர்நெட் சேவையை வரம்பில்லாமல் பயன்படுத்தலாம். போன் கால்களும் முற்றிலும் இலவசம்.

37
Reliance Jio New Year Welcome Plan Coupons and Vouchers

Reliance Jio New Year Welcome Plan Coupons and Vouchers

ஆனால், 4G டேட்டாவைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 2.5 GB மட்டும்தான் கிடைக்கும். மொத்தமாக 200 நாட்களில் 500 GB கிடைக்கிறது. தினமும் 2.5 GB டேட்டாவுடன் கூடிய பிளானில் ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த ஆஃபரை பயன்படுத்திக்கொள்ளலாம். இத்துடன் வேலிடிட்டி காலம் முழுவதும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம்.

47
Reliance Jio 2025 New Year Welcome Plan Last Date

Reliance Jio 2025 New Year Welcome Plan Last Date

இந்தத் திட்டம் ஜனவரி 11, 2025 வரை கிடைக்கும். இந்தக் காலத்திற்குள் 2025 க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் ரூ.468 சேமிக்க முடியும் என்று ரிலையன்ஸ் ஜியோ கூறுகிறது.

57
Jio New Year Welcome Plan

Jio New Year Welcome Plan

மேலும், Ajio தளத்தில் குறைந்தபட்சம் ரூ.2,500க்கு ஷாப்பிங் செய்யும்போது ரூ.500 தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன் கிடைக்கிறது. Swiggy இல் குறைந்தபட்சம் ரூ.499 க்கு ஆர்டர் செய்தால் ரூ.150 தள்ளுபடி பெறுவதற்கான வவுச்சரும் கிடைக்கும். Easemytrip.com இன மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தில் விமான முன்பதிவு செய்ய ரூ.1,500 தள்ளுபடி கொடுக்கும் கூப்பனும் இந்த ரீசாரஜுடன் இலவசமாகத் தரப்படுகிறது. இந்த கூப்பன்களை MyJio மொபைல் அப்ளிகேஷன் மூலம் பெறலாம்.

67
Reliance Jio New Year Offer

Reliance Jio New Year Offer

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து, வழங்கியுள்ள குறிப்பிடத்தக்க சலுகை இது. 2024 ஜூலை மாதம், ஜியோவின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன.

77
Reliance Jio Mukesh Ambani

Reliance Jio Mukesh Ambani

கட்டண உயர்வு அமலுக்கு வந்த அதே நேரத்தில் கூடுதல் கட்டணமின்றி 5G சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. ஜியோவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏர்டெல், வி (வோடபோன் ஐடியா) தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்திவிட்டன.Reliance Jio Mukesh Ambani

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ரிலையன்ஸ் ஜியோ

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியர்களுக்கு அதிரடி சரவெடி ஆஃபர் வழங்கிய அம்பானி.. ரூ.799க்கு அசத்தலான போன்
Recommended image2
ஆஹா.. இப்படி ஒரு ஆஃபரா..! இனி வீட்டுக்கு வீடு BSNL தான்.. 11 மாதத்திற்கான அட்டகாசமான பிளான்
Recommended image3
iPhone 17 Series: அடிதடியெல்லாம் வேண்டாம்.. வீட்டில் இருந்தபடி ஆஃபர் விலையில் ஐபோன் வாங்கலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved