- Home
- டெக்னாலஜி
- தொலைபேசி
- Realme 15T 5G: 7000mAh பேட்டரி பட்டைய கிளப்புது! மிட்ரேஞ்சில் இதுதான் கிங்! உடனே ஆர்டர் பண்ணுங்க!
Realme 15T 5G: 7000mAh பேட்டரி பட்டைய கிளப்புது! மிட்ரேஞ்சில் இதுதான் கிங்! உடனே ஆர்டர் பண்ணுங்க!
ரியல்மி நிறுவனம் செப்டம்பர் 2-ல் புதிய ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இதன் சிறப்பம்சம் 7,000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி.

சூப்பர் பேட்டரியுடன் ரியல்மி ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனம் தனது புதிய மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனான ரியல்மி 15டி 5ஜி (Realme 15T 5G) ஸ்மார்ட்போனை செப்டம்பர் 2-ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ மாடல்களுடன் இந்த புதிய போனும் இணைய உள்ளது.
இந்த போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் 7,000mAh பேட்டரி திறன். இது ரெட்மி 15 மாடலுக்கு இணையாக உள்ளது. மேலும், இதில் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AI திறன்களுடன் கேமரா
Realme 15T 5G வெறும் 7.79mm தடிமன் மற்றும் 181g எடை கொண்டது. இந்த பேட்டரி திறனுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இதுவே மிகவும் இலகுவானது என நிறுவனம் கூறுகிறது. இது ரெட்மி 15 (217g) ஐ விட கணிசமாக இலகுவாக உள்ளது. மேலும், இது மேட் ஃபினிஷ் மற்றும் டெக்ஸ்சர்ட் தோற்றத்தைக் கொண்டிருக்கும்.z
ரியல்மி 15டி 5ஜி (Realme 15T 5G), 50-மெகாபிக்சல் AI பின்புற கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் AI செல்ஃபி கேமராவுடன் வருகிறது. பின்புற கேமரா 4K வீடியோ பதிவை ஆதரிக்கிறது.
6.57-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இதன் அதிகபட்ச பிரைட்னஸ் 4000 நிட்ஸ் ஆகும். மேலும், இதில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Realme 15T 5G ரிலீஸ் தேதி எப்போது?
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் சிப்செட் மூலம் இயங்கும், இது முந்தைய 14T மாடலில் இருந்த டைமன்சிட்டி 6300 ஐ விட மேம்படுத்தப்பட்டது.
அறிமுகத்தின் போது, ரியல்மி UI 6 உடன் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளியாகும். ரியல்மி நிறுவனம் மூன்று OS அப்டேட்கள் மற்றும் நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு பேட்ச்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
ரியல்மி 15டி 5ஜி (Realme 15T 5G) 8GB/128GB மாடல் சுமார் ரூ. 20,999 விலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8GB/256GB மற்றும் 12GB/256GB மாடல்கள் முறையே ரூ. 22,999 மற்றும் ரூ. 24,999 விலையில் இருக்கலாம். இந்த போன் ஃபளோயிங் சில்வர், சில்க் ப்ளூ மற்றும் சூட் டைட்டானியம் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 2-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.