ரிலீசுக்கு முன்னாடியே இப்படியா! மீண்டும் லீக்கான ஐபோன் SE 4 டிசைன்!
iPhone SE 4 leaks: ஐபோன் SE 4 ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே அதைப் பற்றிய அப்டேட்டுகள் கசிந்து வருகின்றன. இப்போது ரியர் பேனல் டிசைன் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவிட்டது.

iPhone SE 4
சமீபத்தில் கசிந்துள்ள புகைப்படங்கள், வரவிருக்கும் iPhone SE 4 இன் பின்புற பேனல் வடிவமைப்பு வெளிப்படுத்தி உள்ளன. 2022ஆம் ஆண்டு வெளியான iPhone SE க்குப் பிறகு அதன் புதிய மாடல் வெளியாக உள்ளது.
iPhone SE 4
ஆப்பிளின் மிகவும் மலிவு விலை மொபைலான இது குறிப்பிடத்தக்க ஹார்டுவேர் மாற்றங்களைக் கொண்டிருக்கலாம். இதுபற்றி டிப்ஸ்டர் @MajinBuOfficial பகிர்ந்துள்ள படங்கள், iPhone 16 மற்றும் iPhone SE 4 மொபைல்களின் தோற்றத்தைக் காட்டுகின்றன.
iPhone SE 4
கசிந்த புகைப்படங்கள் iPhone SE 4 டம்மி யூனிட்டைக் காட்டுகின்றன. அதனால்தான் பின்புற பேனலில் ஆப்பிளின் லோகோ இல்லை. படங்கள் போனின் டிஸ்ப்ளே பற்றிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், ஒரு விஷயம் தனித்து நிற்கிறது: ஐபோன் SE 4 அதன் முந்தைய மாடலைப் போலவே ஒரே பின்புற கேமராவைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
iPhone SE 4
ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது ஐபோன் SE 4 இல் பெரிய கேமரா பம்ப் இருப்பது படங்களில் தெரிகிறது. கூடுதலாக, பவர் பட்டன் தொலைபேசியின் வலது பக்கத்தில் தெரிகிறது. ஐபோன் SE 3 இல் பயன்படுத்தப்படும் A15 பையோனிக் சிப்பை விட செயல்திறன் மிக்க A18 சிப் ஐபோன் SE 4 மொபைலில் இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
iPhone SE 4
புதிய சிப்புடன், ஐபோன் SE 4 இல் 8GB RAM இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் ஆப்பிளின் மேம்பட்ட பல வசதிகளும் புதிய ஐபோன் SE 4 இல் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. முந்தைய மாடலின் சிறிய 4.7-இன்ச் டிஸ்ப்ளேவுக்கு விடைகொடுத்து 6.06-இன்ச் LTPS OLED டிஸ்பிளே அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
iPhone SE 4
48 மெகாபிக்சல் பின்புற கேமராவை இருக்கலாம் சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், முக்கியமான அப்டேடாக இருக்கும். iPhone SE 4 இன்-ஹவுஸ் 5G மோடம் கொண்ட முதல் ஆப்பிள் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் ஓர் அறிக்கை சொல்கிறது. இது பயனர்களுக்கு மேம்பட்ட இன்டர்நெட் இணைப்பை வழங்கும். இப்படி பல அப்டேட்டுகள் வந்துகொண்டிருந்தாலும், iPhone SE 4 வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ரிலீஸ் தேதி நெருங்கும்போது, வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.