ஐபோன் 17 அப்டேட்: iOS 19 உடன் புதிய டிசைனில் சூப்பர் கேமரா!
iPhone 17 Camera: வரும் மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் சில பெரிய அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக iOS 19 பற்றி சில முக்கியமான தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone 17 update
வரும் மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் சில பெரிய அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் ஸ்பிரிங் வெளியீட்டு நிகழ்விலும், ஜூன் மாதம் WWDC 2025 நிகழ்ச்சியிலும் ஆப்பிளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம். குறிப்பாக iOS 19 பற்றி சில முக்கியமான தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone 17 Camera
iOS 19 செப்டம்பரில் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால், ஆப்பிள் புதிய iOS இல் உள்ள புதிய அம்சங்கள், மாற்றங்கள் பற்றிய அறிவிக்கலாம். iOS 19 உடன் ஐபோன் 17 கேமரா செயலி மறுவடிவமைப்பு செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
iPhone 17 smartphone
சில காலமாகவே iOS 19 தயாரிப்பு நிலையில் உள்ளது. ஜூன் மாதம் WWDC 2025 நிகழ்ச்சியில் இதன் முன்னோட்டம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, iOS 19 புதிய அம்சங்களைப் பற்றிய பல தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. குறிப்பாக, கேமரா செயலி மறுவடிவமைப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
iPhone 17 latest update
கேமரா வ்யூஃபைண்டர் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும், ஆனால் கேமராவின் முன் உள்ள பொருள் அதிகமாகத் தெரியும். அது ஒரு ஒளிஊடுருவக்கூடிய பேனலைக் கொண்டிருக்கும். புதிய வடிவமைப்பில் கீழ் பகுதியில் மெனுவுடன் புகைப்படம் மற்றும் வீடியோவின் தெளிவுத்திறனை சரிசெய்ய எளிய வசதியைக் கொண்டிருக்கும். ஐபோன் கேமராவில் வரும் இந்த அப்டேட் visionOS கேமராவைப் போல இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
iPhone 17 with iOS 19
கேமரா மறுவடிவமைப்பு தவிர, iPhone 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் iOS 19 உடன் புதிய ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களும் இடம்பெறும். iOS 19 ChatGPT போன்ற உரையாடல் வடிவ Siri ஐக் கொண்டுவரும் என்று சில கணப்புகள் கூறுகின்றன. ஆனால் இந்த அப்டேட் பயன்பாட்டுக்கு வர 2026 வரை ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
iPhone 17 launch
தற்போது iOS 18 பயன்பாட்டில் உள்ளது. iOS 19 அறிமுகமாவதற்கு முன்பு படிப்படியாக AI அம்சங்களை வெளியீட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்போதைய நிலையில், புதிய ஐபோன் OS ஐப் பார்க்க, ஜூன் மாதத்தில் WWDC 2025 வரை காத்திருக்க வேண்டும். iPhone 17 வெளியீட்டிற்கு முன் பீட்டா பதிப்புகள் வரவும் வாய்ப்பு உள்ளது.