பழைய மொபைல் சும்மா இருக்கா? அதை நன்கொடையாக வழங்கலாமே!
பழைய போன்களை நன்கொடையாகப் பெற்று, அவற்றைப் ஒரு நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தும் பல அமைப்புகள் உள்ளன. நீங்கள் பயன்படுத்தாமல் போட்டிருக்கும் பழைய செல்போன் சிலரது வாழ்க்கையை மேம்படுத்த உதவும். உலக அளவில் இதுபோல பழைய போன்களைச் சேகரிப்பவர்கள் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Salvation Army
சால்வேஷன் ஆர்மி 133 நாடுகளில் வேலை செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன் மக்களுக்கு உதவுகிறது. வீடற்றவர்களுக்கும் பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்கிறார்கள். இவர்கள் நன்கொடையாக செல்போன்களையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
Cell Phones for Soldiers
இது ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாகும். இது மூத்த ராணுவப் பணியாளர்களுக்கு தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் அவசரகால நிதியுதவியை வழங்கும் நோக்கில் இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 25 மில்லியனுக்கும் அதிகமான செல்போன்களை மறுசுழற்சி செய்துள்ளது.
Medic
மெடிக் அமைப்பு, உலகின் மிகவும் அணுக முடியாத பகுதிகளில், குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சேவை செய்யும் சுகாதார நிபுணர்களுக்கான அதிநவீன, மென்பொருளை உருவாக்குதல், விநியோகித்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
உங்கள் பழைய போனை இவர்களுக்கு அனுப்ப இலவச ஷிப்பிங் லேபிளை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவர்கள் மொபைல் குப்பையில் வீசப்படுவதைத் தடுப்பதோடு மறுசுழற்சியும் செய்கிறார்கள்.
Call2Recycle
கால் 2 ரீசைக்கிள் என்பது பழைய பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதில் கவனம் செலுத்தும் குழு. பழைய பேட்டரிகளில் இருந்து வரும் நச்சுக் கழிவுகளின் பாதிப்பைத் தடுக்க முயல்கிறார்கள். அனைத்து விதமான செல்போன்களையும் இவர்கள் வாங்கிக்கொள்கிறார்கள். பேட்டரிகள் இல்லாமல் கூட வழங்கலாம்.
GreenDrop
கிரீன் டிராப் என்பது உங்கள் பழைய செல்போன் உட்பட பல்வேறு வகையான எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக்கொள்ளும் மற்றொரு அமைப்பாகும். இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பாக இருந்தாலும், பல நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளும் செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளுக்கு உதவ பழைய போன்களை சரிசெய்து விற்று நிதி திரட்டும்.
Secure the Call
செக்யூர் தி கால் குழுவினர் நன்கொடையாக வழங்கப்பட்ட செல்போன்களை மறுசுழற்சி செய்வது சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவற்றை வழங்குகிறார்கள். முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மொபைல்களைக் கொடுத்து, அவர்கள் அவசர உதவிகளைப் பெற துணையாக உள்ளனர்.