இந்த கிரீன் டாட் இருந்தா... உங்க மொபைல் ஹேக் ஆகியிருக்கு! உடனே செய்ய வேண்டியது என்ன?
ஹேக்கர்களில் வலையில் சிக்கினால் அவை திருடப்படும் வாய்ப்பு அதிகம். உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளா என்பதை அறிய ஒரு பச்சை புள்ளி உதவும். எப்படி என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Mobile Hackers
ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் இன்றியமையாத பகுதியாகும். உங்கள் மொபைலில் வங்கி விவரங்கள், தனிப்பட்ட கோப்புகள் பல இருக்கும். ஹேக்கர்களில் வலையில் சிக்கினால் அவை திருடப்படும் வாய்ப்பு அதிகம். ரகசியதமாக வேவு பார்க்கவும் நேரிடலாம்.
Hacking
பொது வைஃபையைப் பயன்படுத்துதல், ஸ்பேம் இணைப்புகளைக் கிளிக் செய்தல், அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்குதல் போன்ற பல வழிகளில் ஸ்மார்ட்போனை ஹேக் செய்யலாம். இது ஹேக்கர்கள் உங்கள் மொபைலை ரகசியமாகக் கையாள வழிவகுக்கும்.
Green dot
ஸ்மார்ட்ஃபோன் திரையின் மேல் பகுதியில் பச்சைப் புள்ளி அல்லது பச்சை நிறத்தில் குறீயிடு ஏதும் தெரிந்தால், உங்கள் அழைப்புகள் பதிவு செய்யப்படுகின்றன அல்லது கேமரா அல்லது மைக் பயன்பாட்டில் உள்ளது என்று அர்த்தம்.
Camera, Mic in use
கேமரா மற்றும் மைக்கைப் பயன்படுத்தாமல், பச்சைப் புள்ளி தெரிகிறது என்றால், மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உங்கள் மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களும் திருட்டு போகும் ஆபத்தில் இருப்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
Uninstall unwanted apps
மொபைலில் இருக்கும் தேவையற்ற மற்றும் சந்தேகத்துக்குரிய அனைத்து செயலிகளையும் அகற்றிவிட்டு, ஃபாக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் புரிந்துரை செய்கிறார்கள்.
Factory Reset
உடனடியாக மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களில் கேமரா மற்றும் மைக்கை பயன்படுத்துபவை எவை என்று சரிபார்த்து, சந்தேகத்திற்குரியதாகத் தோன்றும் எந்த செயலியையும் நீக்கிவிட வேண்டும்.