பிஎஸ்என்எல் மீது இடியை இறக்கிய ஜியோ! 98 நாள் வேலிடிட்டி பிளான் இவ்ளோ கம்மியாவா!
பிஎஸ்என்எல் மீது ஜியோ ஒரு பெரிய இடியை இறக்கியுள்ளது. வெறும் ரூ.98 க்குக் கிடைக்கும் ஜியோவின் மினிமம் ரீசார்ஜ் திட்டம்தான் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
Jio Rs 98 Plan
நாடு முழுவதும் சுமார் 49 கோடி பேர் ரிலையன்ஸ் ஜியோ சிம்மை பயன்படுத்துகின்றனர். அதிவேக இணைப்பு மற்றும் சிறந்த சலுகைகளின் அடிப்படையில், தொலைத்தொடர்பு துறையில் அதிக சந்தாதாரர்களைக் கொண்டிருப்பது ஜியோதான்.
சமீபத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிப்பால் சில ஜியோ பயனர்கள் நிச்சயமாக வருத்தப்பட்டனர். ஆனால் இப்போது ஜியோ மீண்டும் வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது.
Jio long validity plan
ரீசார்ஜ் கட்டண உயர்வுக்குப் பிறகு மலிவான ஆப்ஷனைத் தேடிய பயனர்களுக்கு ஜியோ நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை குறைந்த விலையில் கொடுக்கிறது. இந்த ரீசார்ஜ் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் சுமார் 100 நாட்களுக்கு ரீசார்ஜ் பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம்.
Jio 999 plan
ஜியோ அதன் பயனர்களுக்கு 98 நாட்கள் நீண்ட வேலிடிட்டியுடன் சிறந்த ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. உங்கள் ஜியோ எண்ணை 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 98 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிட்டெட் இலவச அழைப்புகளைச் செய்யலாம். மற்ற திட்டங்களைப் போலவே, இதிலும் பயனர்களுக்கு இலவச வாய்ஸ் காலுடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும்.
Jio 2G Data per day
ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு அதிக டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2GB ஹைஸ்பீடு டேட்டாவைப் பெறலாம். அதாவது 98 நாட்களில் மொத்தம் 196GB டேட்டாவைப் பயன்படுத்தலாம். எனவே, அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் பொருத்தமானது.
Jio 5G Network
அன்லிமிடெட் 5ஜி டேட்டா வசதி இந்தத் திட்டத்தில் கிடைக்கும் ஒரு போனஸ் பலன். தினசரி டேட்டா வரம்பு போதவில்லை என்றால், 5G டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த பிளானுடன் அன்லிமிட்டெட் 5G டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ஆனால், உங்கள் பகுதியில் ஜியோவின் 5G நெட்வொர்க் இணைப்பு இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.