BSNL Freedom Offer: தினமும் 2GB டேட்டா! அதுவும் இவ்வளவு கம்மி விலையிலா?
BSNL Freedom Offer: சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஒரு அசத்தலான சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஃப்ரீடம் ஆஃபர்' என்ற பெயரில் 'ஆசாதி கா பிளான்' என்ற பெயரில் வெறும் ரூ.1-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிரடி சலுகை
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப சலுகைகளையும் அறிவித்து வருகிறது. ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெறும் 1 ரூபாய்க்கு 'ஆசாதி கா பிளான்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNLன் அசத்தலான பிளான்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஒரு அசத்தலான சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஃப்ரீடம் ஆஃபர்' என்ற பெயரில் 'ஆசாதி கா பிளான்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் டேட்டா, அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. அன்லிமிடெட் அழைப்பு சலுகையுடன் கூடிய இந்தத் திட்டம் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்குமா?
பிஎஸ்என்எல் ரூ. 1 திட்ட விவரங்கள்
பிஎஸ்என்எல் ஃப்ரீடம் டே சலுகையின் கீழ் 'ஆசாதி கா பிளான்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.1-க்கு கிடைக்கும் இந்தத் திட்டத்தில் தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற அற்புதமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது 30 நாட்கள் செல்லுபடியாகும்.
BSNL’s Freedom Offer - Only @ ₹1!
Enjoy a month of digital azadi with unlimited calls, 2GB/day data 100 SMS & Free SIM.
Free SIM for New Users.#BSNL#DigitalIndia#IndependenceDay#BSNLFreedomOffer#DigitalAzadipic.twitter.com/aTv767ETur— BSNL India (@BSNLCorporate) August 1, 2025
இந்தச் சலுகை எப்போது? எப்படிப் பெறுவது?
இந்தச் சலுகை ஆகஸ்ட் 1 முதல் 31 வரை மட்டுமே கிடைக்கும். ஆகஸ்ட் 31-க்குள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை என்றால், இந்த அற்புதமான வாய்ப்பை நீங்கள் இழக்க நேரிடும். இந்தச் சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சில்லறை விற்பனைக் கடையைப் பார்வையிட்டு இந்தத் திட்டத்தைப் பெறலாம்.
இந்த உத்தி பலனளிக்குமா?
சமீபத்திய TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூன் 30, 2025 நிலவரப்படி, பிஎஸ்என்எல் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதன் மூலம் மொத்த பயனர் எண்ணிக்கை 90,464,244 ஆகக் குறைந்துள்ளது. இதில் 29,822,407 கிராமப்புற வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தச் சூழலில், பிஎஸ்என்எல்லின் 'ஃப்ரீடம் ஆஃபர்' வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்கும் ஒரு சிறப்பு உத்தியாகக் கருதப்படுகிறது. இந்தச் சலுகையுடன், மற்ற முன்பணம் செலுத்திய திட்டங்களையும் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தவுள்ளது.