ரூ.15,000 பட்ஜெட்டில் ஆல்-ரவுண்டு 5G ஸ்மார்ட்போன்! உடனே ஆர்டர் பண்ணுங்க!
Best 5G Smartphones under Rs 15,000 Janurary 2025: புத்தாண்டில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதன் வாங்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே இப்போது, மலிவு விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் 5G ஸ்மார்ட்போன்கள் காத்திருக்கின்றன. அதுவும் ரூ. 15,000க்கு குறைவான பட்ஜெட்டில் பிரபல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.
Poco M7 Pro 5G
Poco M7 Pro 5G ஸ்மார்ட்போன் அதன் முந்தைய மாடலான Poco M6 Pro ஐ விட, மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது. இது 6.67-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. MediaTek Dimensity 7025 Ultra processor மற்றும் 8GB ரேம் மூலம் இயக்கப்படுகிறது. M7 Pro மல்டி டாஸ்கிங் மற்றும் சாதாரண கேமிங் பயன்பாட்டுக்கு சிறப்பாக இருக்கும்.
50MP பிரதான கேமரா நல்ல புகைப்படங்களைப் உறுதிசெய்கிறது. அதே நேரத்தில் 20MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 5,000mAh பேட்டரியுடன், 45W வேகமான சார்ஜிங் அம்சமும் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS இல் இயங்குகிறது.
CMF Phone 1
CMF Phone 1 பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையைக் குறிவைத்து அறிமுகமாகியுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், பின்புற கவர்களை மாற்றும் வசதி. இது பயனர்கள் தொலைபேசியின் தோற்றத்தை விருப்பம் போல மாற்றிக்க்கொள்ள அனுமதிக்கிறது. இது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் மிகவும் அரிய அம்சமாகும். MediaTek Dimensity 7300 பிராசஸர் மூலம் இயக்கப்படும் இந்த மொபைல், அன்றாட பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கும் ஈடுகொடுக்கிறது.
6.67-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வீடியோக்களைப் பார்ப்பதற்கும் சிறந்த தேர்வாக அமைகிறது. 50MP பிரதான கேமரா கொண்ட இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் தாங்கும் செயல்திறனை உறுதி செய்கிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.6 இல் இயங்குகிறது.
Redmi 13 5G
கடந்த ஆண்டு Redmi 12 5G மொபைலின் அப்கிரேடு மாடலாக வெளியானதுதான் Redmi 13 5G. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது சிறப்பான ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவங்களை வழங்குகிறது. புதிய 108MP பிரைமரி கேமரா நல்ல வெளிச்சத்தில் சிறப்பாக செயல்படுகிறது. ரூ.15,000 விலைப் பிரிவில் சிறப்பான புகைப்படங்களை வழங்கும் மொபைல்களில் இது தனித்து நிற்கிறது.
5,000mAh பேட்டரியில் சார்ஜிங் வேகம் 33W ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சார்ஜரும் பாக்ஸுடன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் மூலம் செயல்படுகிறது.
Motorola G64 5G
Motorola G64 5G சுத்தமான, ப்ளோட்வேர் இல்லாத ஸ்மார்ட்போனை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும். இது MediaTek Dimensity 7025 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. தினசரி பணிகளுடன் லைட் கேமிங்கையும் திறம்பட கையாளுகிறது. இதில் உள்ள முக்கிய அம்சம் மிகப்பெரிய 6,000mAh பேட்டரி. இது ஒரே சார்ஜில் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் திறன் கொண்டது. அதிக நேரம் செல்போனை பயன்படுத்துபவர்களுக்கு இது சரியானதாக இருக்கும். OIS உடன் 50MP பிரதான கேமரா உள்ளது. இது நல்ல வெளிச்சத்தில் நல்ல படங்களை எடுக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 இல் இயங்கும் இந்த மொபைல் தேவையற்ற செயலிகள் எதுவும் இல்லாமல் கிடைப்பது இதன் மற்றொரு சிறப்பு. மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB மெமரி மற்றும் 12GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் மாடலின் விலை 15,000 ரூபாய்க்கு மேல் இருக்கும்.