ஸ்மாட்போனுக்கு குட்பை! கீபேட் போனுக்கு மாறும் புது ட்ரெண்ட்! காரணம் இதுதான்!
இந்த ஸ்மார்ட்போன்களின் காலத்தில் கீபேட் போன்கள் மீண்டும் பிரபலமாகி வருகின்றன. ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி சலித்துப் போனவர்கள் கீபேட் போன்களை நாடுகிறார்கள். அவற்றில் ஸ்மார்ட்போன்களில் இல்லாத சில வசதிகள் இருப்பதும் பலரைக் கவர் முக்கியக் காரணம்.
Smartphones
ஸ்மார்ட்போன்கள்: ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்பு, கீபேட் போன்கள் மட்டுமே கிடைத்தன. போன் கால், எம்.எம்.எஸ். போன்ற அடிப்படை வசதிகள் அந்தக் காலத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிறகு ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. கீபேட் போன்களை மக்கள் கைகளில் பார்ப்பது அரிதாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் கீபேட் கொண்ட ஃபீச்சர் போன்களை வாங்குவதை நிறுத்திவிட்டனர்.
Smartphone alternatives
ஸ்மார்ட்போனுக்கு மாற்று: இப்போது சில ஆண்டுகளாக, காலம் மாறி வருவதாகத் தெரிகிறது. ஃபீச்சர் போன்களுக்கான தேவை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மொபைல் மார்க்கெட்டில் தரமான கீபேட் போன்களுக்கு தனி டிமாண்ட் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
Smartphone boredom
ஸ்மார்ட்போன் சலிப்பு: ஸ்மார்ட்போன்களால் மக்கள் அலுத்துவிட்டனர். சமூக ஊடகங்கள் மற்றும் பிற நோட்டிஃபிகேஷன்கள் காரணமாக, மக்கள் நாள் முழுவதும் தங்கள் மொபைலையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் போன் பேசுவதற்கு குறைவாகவும், சமூக வலைத்தளங்களைப் பார்க்க அதிகமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நாள் முழுவதும் செல்போன் பிடியில் இருப்பது போல மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இந்த மன அழுத்தத்தைத் தவிர்க்க, மக்கள் மீண்டும் ஃபீச்சர் போன்களின் பக்கம் திரும்பியுள்ளனர்.
Privacy
தனியுரிமை பற்றி கவலை இல்லை: ஸ்மார்ட்போன்களில் தனியுரிமை பற்றிய கவலைகள் உள்ளன. இணைய குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றில் சிக்கும் அபாயமும் வெகுவாகக் குறையும். ஸ்மார்ட்போன்கள் மூலம் உளவு பார்க்கப்படுகிறோமா என்ற பயமும் பயனர்கள் மத்தியில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பேசிக் கீபேட் போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் அதிக தரவு சேமிப்புக்கு இடமில்லை. தனிப்பட்ட தரவுகள் கசிந்துவிடும் அபாயம் குறைவு. ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது கீபேட் போன்களில் தனியுரிமை பற்றிய கவலை குறைவாகவே உள்ளது.
Lower price
குறைந்த விலை: இப்போதெல்லாம், ஒரு நல்ல ஸ்மார்ட்போனின் விலை சுமார் 10,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் ஒரு கீபேட் போன் 1,000-2,000 ரூபாய்க்குக் கிடைக்கிறது. பேசுவதற்கு மட்டும் செல்போன் தேவைப்படுகிறது என்றால் அவர் ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக ஒரு ஃபீச்சர் போன் வாங்கிவிடுகிறார்கள்.
Long Battery life
நீண்ட பேட்டரி ஆயுள்: ஃபீச்சர் போன்களின் பேட்டரி மிக நீண்ட காலம் நீடிக்கும். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இயர்பட்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்தையும் சார்ஜ் செய்யவேண்டி இருக்கிறது. ஆனால் கீபேட் செல்போன்களில் பேட்டரி சிறப்பாக இருக்கிறது.அவை நாள் கணக்கில் பேட்டரி லைஃப் கொண்டிருக்கின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தது 3-4 நாட்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
Reliability
நம்பகத்தன்மை: கீபேட் செல்போன்கள் ஸ்மார்ட்போன்களை மிகவும் நம்பகமானவை. அவற்றில் ஹேங் ஆகும் பிரச்சினை இருக்காது. அப்ளிகேஷன்களை நிறுவும் வசதி இல்லாமல் இருப்பதால், தீங்கும் செய்யும் வைரஸ் ஏதும் இருக்குமோ என்ற கவலையும் வேண்டாம். சிறிய அளவிலான வடிவமைப்பு கொண்டிருப்பதால் கைக்கு அடக்கமாக பயன்படுத்தவும் சுலபமாக இருக்கும்.