MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 2024ஆம் ஆண்டில் தமிழகத்தை பாதித்த மிகப்பெரிய சம்பவங்கள்.! இதோ டாப் 5 நிகழ்வுகள்

2024ஆம் ஆண்டில் தமிழகத்தை பாதித்த மிகப்பெரிய சம்பவங்கள்.! இதோ டாப் 5 நிகழ்வுகள்

Year ender : 2024ஆம் ஆண்டு தமிழகத்தில் பல மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்தன. இயற்கை சீற்றங்கள், விஷச்சாராய மரணங்கள், கொலைகள் போன்றவை மக்களைப் பெரிதும் பாதித்தன. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஆம்ஸ்ட்ராங் கொலை, தொடர் என்கவுண்டர்கள், காங்கிரஸ் நிர்வாகி மர்ம மரணம் மற்றும் சென்னை அருகே நிகழ்ந்த ரயில் விபத்து ஆகியவை அடங்கும்.

3 Min read
Author : Ajmal Khan
Published : Dec 12 2024, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Tamilnadu 2024

Tamilnadu 2024

மறக்க முடியாத நிகழ்வுகள்

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் சிறப்பாகவே தொடங்கியது. இருந்த போதும் பல்வேறு மறக்க முடியாத நினைவுகளோடும், பல சம்பவங்களை மக்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. அதில் முக்கியமான சம்பவங்கள் இனியும் நடக்கக்கூடாது என மக்கள் வேண்டிக்கொள்வார்கள். அந்த வகையில் இயற்கை சீற்றங்களையும், விஷச்சாராய மரணமும். கொலை சம்பவங்களும் மக்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி இந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம் 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Armstrong death

Armstrong death

ஆம்ஸ்ட்ராங் கொலை

தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்  தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது அவரை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் ஆம்ஸ்ட்ராங், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 25க்கும் மேற்பட்ட குறவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு இருந்தது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த திருவெங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.

37
armstrong murder

armstrong murder

தமிழகத்தில் தொடரும் என்கவுண்டனர்

தமிழகத்தில் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்களால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக அரசு எதிர்கொண்டது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிக்காக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகளுக்கே சென்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அந்த வகையில் பல நாட்களாக போலீசார் தேடி வந்த ரவுடிக்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.  ஆம்ஸ்ட்ராங்க கொலை வழக்கில் முதலில் அரிவாளால் வெட்ட தொடங்கிய முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.  அடுத்தாக கொலை, கொள்ளை என 59 வழக்குகளில் தொடர்புடைய காக்கா தோப்பு பாலாஜியையும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

47
chennai encounter

chennai encounter

சுட்டுப்பிடித்த போலீசார்

மற்றொரு என்கவுண்டர் தான் சீசிங் ராஜா,  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக தேடி வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்ட போது தப்பிக்க முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவிற்கும் எந்த தொடர்பும் இல்லையென போலீசார் வழக்கை முடித்தனர். 

57
jayakumar death

jayakumar death

காங்கிரஸ் நிர்வாகி மர்ம மரணம்

திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த ஜெயக்குமார் தன்சிங் காணமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கடந்த மே மாதம்  புகார் தெரிவித்தனர். மேலும் அவர் எழுதிய கடிதமும் சிக்கியது. இதனையடுத்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில்  தோட்டத்தில் மர்மமான முறையில் எரிந்து நிலையில் சடலமாக அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

எனவே ஜெயக்குமாரை யாராவது கடத்தி சென்று கொலை செய்தனரா.? அல்லது தற்கொலை செய்தாரா என விசாரணை நடத்தப்பட்டது. பல கோணங்களில் விசாரணை நடத்தியும் கொலைக்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை.  முதலில் தற்கொலை என கூறப்பட்ட நிலையில் அவரது உடலில் கல் கட்டப்பட்டு இருந்ததும், வாயில் பிரஸ் இருந்ததும் மர்மத்தை அதிகரித்தது. ஆனால் இறுதிவரை காங்கிரஸ் நிர்வாகி மரணம் தொடர்பான முடிச்சை போலீசாரால் அவிழ்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

67
Train Accident chennai

Train Accident chennai

சென்னை அருகே மிகப்பெரிய ரயில் விபத்து

இந்தியாவில் பல மாநிலங்களில் அவ்வப்போது ரயில் விபத்துகள் நடைபெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் அதிலும் சென்னைக்கு அருகே நடைபெற்ற விபத்தில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் 
19 பயணிகள் காயமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 

77
train accident

train accident

விபத்தா.? சதியா.?

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விபத்திற்கான காரணம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய நிலையில் முதலில் தொழில்நுட்பக் கோளாறு காரணம் எனவும் மனிதத் தவறுகளால் நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. கடைசியாக என்ஐஏ போலீசாரின் தீவிர விசாரணை மேற்கொண்டர். அதில்  ரயில் பாதையில் லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட் ஆகியவற்றை கழற்றியிருப்பது தெரியவந்தது. எனவே யாரோ திட்டமிட்டு ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சதி வேலையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
வெள்ளம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved