MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 43 வயதில் தில்லையம்மாளுக்கு வந்த ஆசை.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

43 வயதில் தில்லையம்மாளுக்கு வந்த ஆசை.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Crime News: அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : May 03 2026, 08:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள வெள்ளைக்கோட்டை வடம்போக்கி தெருவை சேர்ந்தவர் சரவணப்பெருமாள் (47). பந்தல் தொழிலாளி. இவரது மனைவி தில்லையம்மாள் (43). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அதே மில்லில் வேலை பார்த்து வந்த ஸ்ரீரங்கம் (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Asianet News

இந்த விவகாரம் நாளடைவில் கணவர் சரவணப்பெருமாளுக்கு தெரிய வந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டார். அதன்படி ஃபுல் மப்பில் கணவரை மனைவி தில்லையம்மாள் நைசாக பேசி அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பாப்பன்குளம் கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

35
Image Credit : our own

அப்போது அங்கு தயாராக இருந்த கள்ளக்காதலன் ஸ்ரீரங்கம் மற்றும் தில்லையம்மாள் இருவரும் சேர்ந்து சரவணப்பெருமாளை கண்மாய் நீரில் மூழ்கடித்து துடிக்கதுடிக்க கொலை செய்தனர். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர். மறுநாள் அப்பகுதி மக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

45
Image Credit : our own

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணப்பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் மனைவி தில்லையம்மாளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

55
Image Credit : Google

பின்னர் போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தாலி கட்டிய கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
தமிழ்நாடு
கணவன்
காவல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! 50% மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர் – தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்!
Recommended image2
TNEB : மின்தடையை இந்த வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம்! 24 மணி நேரமும் சேவை!
Recommended image3
PMFME Scheme: சொந்தமாக ஊறுகாய், மசாலா பிசினஸ் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் மானியம் வழங்கும் மத்திய அரசு; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!
Related Stories
Recommended image1
Top 5 Air Coolers: குறைந்த கரண்ட் பில்.. அதிக குளிர்ச்சி! இந்த கோடைக்கு நீங்க வாங்க வேண்டிய டாப் 5 கூலர் வகைகள்!
Recommended image2
பெட்ரூமுக்கு ஒரு 'ராயல் லுக்' வேண்டுமா? இந்த 5 ராஜஸ்தானி பெட்ஷீட் டிசைன்கள் இப்போது செம டிரெண்டிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved