- Home
- Tamil Nadu News
- 47 வயதில் கள்ளக்காதல்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி.. கதையை முடித்த ராஜமாணிக்கம்! அதிர்ச்சி தகவல்
47 வயதில் கள்ளக்காதல்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி.. கதையை முடித்த ராஜமாணிக்கம்! அதிர்ச்சி தகவல்
கரூர் தொழிற்பேட்டை அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால், கணவரை அவரது மனைவியே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள ஆர்.எஸ்.புரம் காட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் உடல் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார்(47) என்பது தெரியவந்தது. இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதே ஜவுளி நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரை சேர்ந்த ராஜமாணிக்கம்(44) என்பவர் தங்கி சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில்குமார் வீட்டுக்கு ராஜமாணிக்கம் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது செந்தில்குமார் மனைவி பாண்டீஸ்வரிக்கும்(47) ராஜமாணிக்கத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் பேச இருக்க முடியவில்லை. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 25ம் தேதி செந்தில்குமாரை மது அருந்த ராஜமாணிக்கம் நைசாக பேசி அழைத்து சென்றார். மது அருந்தி கொண்டிருக்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம் பீர் பாட்டிலால் செந்தில்குமார் தலையில் அடித்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பிறகு தான் வாங்கி வந்த டீசலை எடுத்து செந்தில்குமார் உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு ராஜமாணிக்கம் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கம், பாண்டீஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். உல்லாசத்துக்காக தாலி கட்டிய கணவனை கொலை செய்ய மனைவியே ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

