பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன்? என்பதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Edappadi Palaniswami explains about BJP alliance: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்று பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை வந்த அமித்ஷா 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கும் என்று கூறிய அமித்ஷா, இபிஎஸ் தலைமையில் தான் இந்த கூட்டணி இருக்கும் என்று விளக்கம் அளித்தார்.
AIADMK-BJP alliance in Tamilnadu
மேலும் ''அதிமுக, பாஜக கூட்டணி இயல்பாக ஒன்று சேர்ந்த கூட்டணி. இதில் எந்தவித குழப்பமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி இருக்கும். இந்த கூட்டணி 2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றிக்கு பிறகு மற்றவை குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக, பாஜக கூட்டணி இருவருக்குமே பலன் அளிக்கக்கூடியது. யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பின்பு பேசி முடிவு எடுக்கப்படும். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப்போவதில்லை'' என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி! அமித் ஷா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
2026 Tamil Nadu assembly election
பாஜக, அதிமுக கூட்டணி உறுதியான பிறகு அமித்ஷா, அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து அளித்தார். பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணியில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், மீண்டும் கூட்டணி வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மற்றும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்து விட்டது என கருத்து தெரிவித்துள்ளன. இந்நிலையில், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன்? என்பதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
Edappadi Palaniswami explains about BJP alliance
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ''2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கைகோர்க்கும் என்ற ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. திமுகவின் பின்னடைவு தீய ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிப்பதற்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்வதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வாய்ப்புகளின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த கூட்டணி அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் எனது வீட்டில் இரவு விருந்தில் பங்கேற்றதற்காக அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒன்றாக, பிரகாசமான, வலுவான மற்றும் மிகவும் துடிப்பான #தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியான தீர்மானத்துடன் நாம் முன்னேறுகிறோம்'' என்று கூறியுள்ளார்.
கூட்டணி உறுதியான குஷியில் அமித்ஷா, அண்ணாமலைக்கு விருந்து அளித்த இபிஎஸ்!