MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மு.க ஸ்டாலினுக்கு படுதோல்வியை பரிசளித்த... இந்த வி.எஸ். பாபு யார்?

மு.க ஸ்டாலினுக்கு படுதோல்வியை பரிசளித்த... இந்த வி.எஸ். பாபு யார்?

Who is VS Babu: கொளத்தூரில் மு.க. ஸ்டாலினை எதிர்த்து வெற்றி கண்டுள்ள வி.எஸ். பாபு பற்றியும் அவரது அரசியல் பயணம் குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 04 2026, 06:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
வி.எஸ். பாபு:
Image Credit : X/Theechatti

வி.எஸ். பாபு:

தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளார் வி.எஸ். பாபு. நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூரில் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு போட்டியாளராக களமிறங்கிய இவர் எதிர்பாராத வகையில், ஸ்டாலினை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார். அவரது நீண்ட அரசியல் பயணம் குறித்து தெரிந்துகொள்வோமா?

27
தொடக்க கால அரசியல்:
Image Credit : Asianet News

தொடக்க கால அரசியல்:

தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு தனது அரசியல் பயணத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடங்கியவர். 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதி மூலம் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்காக, அவர் வடசென்னை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால், வடசென்னையில் திமுக கட்சிக்குள் பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றினார்.

37
அதிமுகவில் இணைவு:
Image Credit : Asianet News

அதிமுகவில் இணைவு:

திமுகவில் சில உட்கட்சி கருத்து வேறுபாடுகள் உருவாகிய பின்னர், வி.எஸ். பாபு கட்சியை விட்டு விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் அவர் வடசென்னை மாவட்டச் செயலாளராக பணியாற்றி, கட்சியில் செல்வாக்கு வாய்ந்த ஒரு தலைவராக அறியப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மற்றும் ஆளுமைத்திறன் குறித்து விமர்சனம் செய்தது மட்டும் இன்றி, தலைமை திறனில் குறைபாடுகள் இருப்பதாக வெளிப்படையாகக் கூறியதால், பாபு அதிமுகவிலிருந்து 2026 பிப்ரவரியில் விலகி நடிகர் விஜய்யின் புதிய கட்சியான “தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.

47
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்புகள்:
Image Credit : X

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்புகள்:

TVK-வில் இணைந்த உடனே, வி.எஸ். பாபு கட்சி தலைமை சார்பில் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற முக்கிய பதவி வழங்கப்பட்டது. குறுகிய காலத்தில் தான் கட்சி உள்கட்டமைப்பில் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வலுவான கோட்டுகளுள் ஒன்றாக கருதப்படும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு நேரடி போட்டியாளராக வி.எஸ். பாபு களமிறங்கினார்.

57
நிதி மற்றும் சொத்து விவரங்கள்:
Image Credit : Asianet News

நிதி மற்றும் சொத்து விவரங்கள்:

வாக்காளர்களுக்கான வேட்புமனு தாக்கலின் போது, வி.எஸ். பாபு 75 வயதுடையவர் என்றும், 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 3.7 கோடி எனும் தகவல் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அசையும் சொத்துகள் ரூ. 37.1 லட்சம், அசையாத சொத்துகள் ரூ. 3.3 கோடி ஆகியவை அடங்கும்.

67
கொளத்தூரில் அதிர்ச்சி வெற்றி:
Image Credit : Asianet News

கொளத்தூரில் அதிர்ச்சி வெற்றி:

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் வி.எஸ். பாபு ஸ்டாலினை முன்னிலை பெற்று தோற்கடித்தது, தமிழ் அரசியலின் வரலாற்றில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தி உள்ளார் எனலாம். ஒவ்வொரு வட்டார வாக்கு எண்ணிக்கையிலும் TVK வேட்பாளர் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால், இது திமுகக்கு பெரும் அதிர்ச்சி. கொளத்தூரில் ஸ்டாலின் தொடர்ந்து அடுத்ததாக போட்டியிட்டாலும், வி.எஸ். பாபு அவரை முற்றிலும் பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

77
புதிய அரசியல் பாதை:
Image Credit : others

புதிய அரசியல் பாதை:

வி.எஸ். பாபுவின் வெற்றி, TVK கட்சியின் இளைஞர் ஆதரவு, மாற்றத்தை விரும்பும் பொதுமக்கள் மனப்பான்மையும், திமுகவின் உள்ளூர் செயல்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு மக்கள் கொடுத்த பதிலடி போலவே தெரிகிறது. கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் வி.எஸ். பாபு இப்போது தமிழகம் முழுவதும் தேடும் முகமாக மாறியுள்ளார், ஒரு முதல்வரை நேரடியாக தோற்கடித்தது அவரது அரசியல் சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
திமுக
மு. க. ஸ்டாலின்
தேர்தல்
தேர்தல் முடிவு
உதயநிதி ஸ்டாலின்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!
Recommended image2
எம்.ஜி.ஆருக்கு பின் ஒரு சரித்திரம்.. கோட்டையை கைப்பற்றிய தளபதி விஜய்.. சிபி சத்யராஜ் நெகிழ்ச்சி!
Recommended image3
ஸ்டாலினுக்கு விழுந்த மரண அடி - திமுக கட்சியின் சரிவுக்கான காரணங்கள் என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved