MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Praveen Chakravarty: தவெக தயவில் எம்.பி.யாகும் ராகுலின் வலது கரம்! யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?

Praveen Chakravarty: தவெக தயவில் எம்.பி.யாகும் ராகுலின் வலது கரம்! யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?

Praveen Chakravarty: ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தயவில் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்? யார் இவர்? விஜய்க்கும் இவருக்கும் என்ன தொடர்பு? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 05 2026, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மாநிலங்களவை இடைத்தேர்தல்
Image Credit : Asianet News

மாநிலங்களவை இடைத்தேர்தல்

அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஒரு இடம் காலியானது. சட்டமனற உறுப்பினர்களின் பெரும்பான்மை அடிப்படையில் நடிகர் விஜய்யின் தவெகவில் ஒருவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும் வாய்ப்பு கனிந்தது. தவெக சார்பில் முதன் முதலாக டெல்லி யார் செல்ல போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், விஜய் பெருந்தன்மையாக மாநிலங்களவை எம்.பி. பதவியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கினார்.

தவெக தயவில் எம்.பி.யாகும் பிரவீன் சக்கரவர்த்தி

இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி பதவிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த பிரவீன் சக்கரவர்த்தி, ''தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

 என் மீது நம்பிக்கை வைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்
Image Credit : x

மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்

ராகுல் காந்தியின் வலது கரமாக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, மிகச் சிறந்த பொருளாதார நிபுணரும் கூட. அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்ற இவர் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ போன்ற உலகளாவிய நிதி மையங்களில் முதலீட்டு வங்கியாளராக உயர் பதவிகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

ராகுல் காந்தியின் வலது கரம்

இந்தியாவின் மிக முக்கிய அடையாளத் திட்டமான ஆதார் (Aadhaar) உருவாக்கத்தின்போது, நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழுவில் இணைந்து முக்கியப் பங்காற்றினார். அரசியலை பொறுத்தவரை பிரவீன் சக்கரவர்த்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் (AICC) தரவு பகுப்பாய்வு (Data Analytics) பிரிவின் தலைவராகவும், அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் (AIPC) அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். ராகுல் காந்தியின் தேர்தல் வியூகங்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய மூளையாக பிரவீன் சக்கரவர்த்தி செயல்படுவதால் டெல்லி மேலிடத்தில் இவருக்கு பெரும் செல்வாக்கு உள்ளது.

Related Articles

Related image1
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
Related image2
CM Vijay: காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..
33
முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பர்
Image Credit : CM Vijay FB

முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பர்

ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவரும், முதல்வருமான விஜய் உடனும் நீண்ட நாட்களாக நல்லதொரு பரஸ்பர நட்புறவை பேணி வருகிறார். தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தார். ஆனால் சிலரின் தலையீட்டால் அது நிறைவேறாமல் போனது. தேர்தலுக்கு பின்பு ஆளும் கட்சியான தவெக கூட்டணியில் காங்கிரஸ் ஐக்கியமாவதற்கு முக்கிய காரணகர்த்தா பிரவீன் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ராகுல் காந்தி
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
அரசியல்
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
புரட்சித்தலைவர் உருவாக்கிய அதிமுக அழிந்ததற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி! நிர்மல்குமார் பேட்டி
Recommended image2
Now Playing
விசாரணைக்கு பின் எ.வ.வேலு அதிரடி பேட்டி ! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக வாசலில் பரபரப்பு !
Recommended image3
Now Playing
தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ! ரகசிய ஆலோசனையின் பின்னணி என்ன?
Related Stories
Recommended image1
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
Recommended image2
CM Vijay: காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved