MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தக்காளி ஒரு கிலோ இவ்வளவு தானா.? லாரி, லாரியாக வந்த வெங்காயம்- இல்லத்தரசிகள் குஷியோ குஷி

தக்காளி ஒரு கிலோ இவ்வளவு தானா.? லாரி, லாரியாக வந்த வெங்காயம்- இல்லத்தரசிகள் குஷியோ குஷி

சமீபகாலமாக அதிகரித்து வந்த தக்காளி, வெங்காயத்தின் விலை தற்போது குறைந்து வருகிறது. அதே நேரத்தில் மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 12 2025, 07:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
tomato onion price

tomato onion price

தக்காளி, வெங்காயம்

மக்களின் அடிப்படை தேவை உண்ண உணவு, அதில் ருசியாக சமைக்க தேவைப்படுவது காய்கறிகள், அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற காய்கறிகள் இல்லாமல் கூட சமையல் செய்ய முடியும், தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமைப்பது எளிதான காரியம் இல்லை. எனவே காய்கறிகடைகளில் இல்லத்தரசிகள் எது வாங்குகிறார்களோ இல்லையோ தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்குவார்கள். அந்ந வகையில் தக்காளி வெங்காயத்தின் உற்பத்தி குறைந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை அவ்வளவு தான்.

26
tomato onion

tomato onion

போட்டி போட்டு விலை உயர்வு

அதன் படி கடந்த சில மாதங்களாக உயர்ந்திருந்த விலையானது தற்போது குறைந்து வருகிறது. கடந்த மாதம் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெங்காயம் 120 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் கிலோ காணக்கில் வாங்கி சென்ற மக்கள் குறைந்த அளவில் வாங்கும் நிலை உருவானது. இதனால் மாத பட்ஜெட்டில் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு என தனி நிதி ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

36
tomato price

tomato price

விலையை குறைக்க நடவடிக்கை

இதனால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைந்த விலையில் மக்களுக்கு சென்று சேரும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தது. அதன் படி மக்கள் கூடும் இடங்களில் தக்காளி, வெங்காயத் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்காத நிலை நீடித்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வெங்காயம் மற்றும் தக்காளி உற்பத்தி தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் படி காரிப் பருவ பயிர்களின் வரத்தின் காரணமாக வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியது.

46
Onion Price

Onion Price

உற்பத்தி அதிகரிப்பு- குறைந்தது விலை

ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 35 முதல் 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 3 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல தக்காளியின் விலையானது சரிந்துள்ளது. தக்காளி உற்பத்தி அதிகரித்ததால் பெட்டி, பெட்டியாக தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. 
 

56
Vegetables Price

Vegetables Price

உயர்ந்தது காய்கறி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

66
Vegetables Price Today

Vegetables Price Today

இன்றைய காய்கறி விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒன்று 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. தமிழகத்தில் இன்று கனமழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்..! மதுரையில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்
Recommended image3
சட்டமன்ற தேர்தல்: காரைக்குடியில் போட்டியிடுகிறார் சீமான்..! 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved