- Home
- Tamil Nadu News
- Tamil Nadu Rain Update : மழை ஊத்தப்போகுது.. காலையிலேயே அப்டேட் கொடுத்த வானிலை மையம் - முழு விபரம்
Tamil Nadu Rain Update : மழை ஊத்தப்போகுது.. காலையிலேயே அப்டேட் கொடுத்த வானிலை மையம் - முழு விபரம்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
கடந்த 26 ஆம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நேற்று முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.
அதேபோல இன்று முதல் வருகிற 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. சிலிண்டர் விலை முதல் வங்கி விடுமுறை வரை - முழு விபரம் இதோ !!