Vegetable Price Today: தக்காளி,வெங்காயம் விலை குறைந்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?
தக்காளி விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு சந்தையில் அதைவிட குறைவாகவும் விற்பனையாகிறது. இதே போல வெங்காயம் விலையும் சிறிதளவு குறைந்துள்ளது.
Vegetables Price Today
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
vegetables
முட்டைக்கோஸ் விலை ?
வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பின்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தில் முருங்கைக்காய் விலை
கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
அதிகரித்த வெண்டைக்காய் விலை
இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய் முதல் 200 ரூபாய் வரைக்கும், மாங்காய் 110 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 1 கிலோ 70 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்
புதிய JN.1 மாறுபாடு அலர்ட் : மாநிலங்கள் இதை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்.. மத்திய அரசு அட்வைஸ்..