Vegetables : திடீரென குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ அவரைக்காய், பீன்ஸ் விலை என்ன தெரியுமா.?
காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விற்பனை விலையானது அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஒரு சில காய்கறிகளின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது.
Vegetable
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அவரைக்காய் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இனி காபி, டீக்கு பதிலாக தினமும் காலையில் இந்த 5 டிரிங்ஸ்ல ஒன்னு குடிங்க.. ஹெல்தியா இருப்பீங்க..
vegetable price hike
முருங்கைக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 40 முதல் 50 ரூபாய்க்கும், கொத்தவரை 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
vegetables
இஞ்சி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.