ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் விலை இவ்வளவா.? போட்டி போடும் காய்கறிகள்.? இன்றைய விலை என்ன.?
Tomato And Onion Price Today : தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் சமையலறை பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி வெங்காயம் விலையானது போட்டி போட்டு அதிகரித்து வருகிறது
Tomato Onion
சமையலும் காய்கறிகளின் தேவையும்
காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வது இயலாது காரியம். அந்த வகையில் சாதத்தோடு ஏதேனும் பொரியல், கூட்டு, ரசம், குழம்பு வைக்க கண்டிப்பாக ஏதாவது ஒரு காய்கறி தேவைப்படும், அதிலும் முக்கியமானது தக்காளி மற்றும் வெங்காயம். இந்த இரண்டு காய்கறிதான் அத்தியாவசியமானது. மற்ற காய்கறிகள் இல்லாமல் கூட சமையல் செய்து விடலாம்,
தக்காளி வெங்காயம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும். காய்கறி சந்தையில் தக்காளி வெங்காயத்தை மட்டுமே பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்குவார்கள். அதற்கு செக் வைக்க தான் தற்போது தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு உயர்கிறது.
TOMATO PRICE
உச்சத்தை தொட்ட தக்காளி, வெங்காய விலை
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதன் படி மொத்த காய்கறி சந்தையிலேயே ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் என உயர்ந்துள்ளது.
இதனால் இல்லத்தரசிகள் தங்கத்தை போன்று கிராம் கணக்கில் வாங்கி செல்கின்றனர். இதே போல வெங்காயத்தின் விலையும் கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் உள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கத்தின் காரணமாக உள்ளூர் சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்தது.
Onion Price Today
ஒரு கிலோ வெங்காயம் விலை இவ்வளவா.?
இதனால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 100 ரூபாய் என்ற அளவிற்கு கடந்த வாரம் எட்டியது. தற்போது காரிப் வெங்காயத்தின் வரத்து வர தொடங்கியதையடுத்து வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 75 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
vegetable price
பச்சை காய்கறி விலை என்ன.?
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பச்சை காய்கறிகளான பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Today
முருங்கைக்காய் விலை இவ்வளவா.?
முருங்கைக்காய் ஒரு கிலோ 150 முதல் 250 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒன்று 10 முதல் 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
tomato price in tamilnadu
உருளைக்கிழங்கு விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது