MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுகவிடம் 40 தொகுதிகளை கேட்கும் பாஜக.? எடப்பாடியின் தேர்தல் கணக்கு என்ன.?

அதிமுகவிடம் 40 தொகுதிகளை கேட்கும் பாஜக.? எடப்பாடியின் தேர்தல் கணக்கு என்ன.?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அதிமுக, பாஜக உட்பட பல கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீடு குறித்தும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

2 Min read
Author : Ajmal Khan
Published : May 20 2025, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டணியும்
Image Credit : google

தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டணியும்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதே நேரம் திமுகவின் கூட்டணியை எதிர்க்க அதிமுகவும் காய் நகர்த்தி வருகிறது. அதன் படி திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திமுகவை வீழ்த்த திட்டமிடும் அதிமுக
Image Credit : Asianet News

திமுகவை வீழ்த்த திட்டமிடும் அதிமுக

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தற்போது சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சியையும் தங்கள் அணிக்கு இழுக்க ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதே போல விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தையும் கூட்டணியில் இணைக்க திட்டமிடுகிறது. ஆனால் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தங்கள் தலைமையில் தான் கூட்டணி என அறிவித்து விட்டது.

35
அதிமுகவின் தொகுதி பங்கீடு என்ன.?
Image Credit : our own

அதிமுகவின் தொகுதி பங்கீடு என்ன.?

இதனால் மற்ற கட்சிகளோடு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் குறைந்தது 170 முதல் 180 தொகுதிகளில் அதிமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் பாஜகவிற்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கீடு செய்தது போல 20 சட்டமன்ற தொகுதியும், பாமகவிற்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் எனவும் ஒரு சில சிறிய கட்சிகளுக்கு என 5 தொகுதிகள் வரை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

45
40 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக
Image Credit : our own

40 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக

ஆனால் பாஜக தரப்போ தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும் எனவே பாஜகவிற்கு 40 தொகுதிகள் வரை கேட்டு பெற வேண்டும் என பாஜக மூத்த தலைவர்கள் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தங்கள் அணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவுள்ளதால் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக  செப்டம்பர் மாதமே பேச்சுவார்த்தையை தொடங்க பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

55
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது.?
Image Credit : our own

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது.?

இதற்காக பாஜக தரப்பில் குழு அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுக தரப்போ இந்தாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கலாம். அப்போது தான் அதிமுக கூட்டணிக்கு எந்த எந்த புதிய கட்சிகள் இணையும் என தெரியவரும் என தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அதிமுக பாஜக கூட்டணி
திமுக கூட்டணி கட்சிகள்
எடப்பாடி பழனிசாமி அதிமுக
நயினார் நாகேந்திரன்
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(9.0 ov)84/2
INDIND
(20.0 ov)191/8
NZ need 108 runs in 66 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Related Stories
Recommended image1
Now Playing
ADMK - BJP சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல தமிழக மக்களின் நலன் சார்ந்த கூட்டணி! நயினார் நாகேந்திரன் பேட்டி
Recommended image2
Now Playing
ADMK - BJP கூட்டணி ! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி நடைபெறும் அமித் ஷா அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved