திமுக கூட்டணியில் பாமக.? வெளியே செல்லுதா விசிக- ஸ்டாலினின் கூட்டணி கணக்கு என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமகவின் நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு உள்ளதாகவும், விசிக அதிமுகவுடன் இணையலாம் என்றும் வதந்திகள் பரவி வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Tamilnadu DMK Alliance And Admk Alliance : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. திரைமறைவில் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தை நேரடியாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் பலம் வாய்ந்த கூட்டணியோடு உள்ள திமுகவை வீழ்த்த அதிமுகவும் புதிய கூட்டணி கணக்கு உருவாக்கி வருகிறது.
அந்த வகையில் தவெகவிற்கு தூது விட்ட அதிமுகவிற்கு நோ என பதில் சொல்லிவிட்டார் விஜய், இதன் காரணமாக வேறு வழியின்றி பாஜகவை தங்கள் கூட்டணியில் இணைக்க இபிஎஸ் திட்டமிட்டார். இதற்கும் கை மேல் பலன் கிடைத்தது.
ADMK Alliance
அதிமுகவின் கூட்டணி திட்டம்
டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகம் வந்த அமித்ஷா அதிமுக- பாஜக கூட்டணியை அறிவித்தார். இதனையடுத்து தங்கள் கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது.
ஆனால் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைய பாமக பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அன்புமணிக்கு பாஜக கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ள நிலையில், ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
DMK Alliance
பாமக, விசிக நிலைப்பாடு என்ன.?
இதன் காரணமாகத்தான் தந்தை- மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகாலமாக நீடிக்கும் விடுதலை சிறுத்தைகள் அணி மாற இருப்பதாக தகவல் வெளியானது. அந்த வகையில் தவெகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது.
ஆனால் இதனை திருமாவளவன் முற்றிலுமாக மறுத்துள்ளார். அதே நேரம் பாமகவை தங்கள் பக்கம் இழுக்கும் பட்சத்தில் வழு குறைந்துள்ள வட மாவட்டங்களும் ஸ்ட்ராங் ஆகும் என திமுக தலைமை நினைப்பதாக கூறப்பட்டது.
Tamil Nadu Assembly Elections
திமுக கூட்டணியில் பாமக.?
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், திமுக கூட்டணிக்குள் பாமக வர இருப்பதாகவும்,
விசிக அதிமுக கூட்டணிக்கு செல்ல இருப்பதாகவும் அதனால் தான் ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் ஏற்படுவதாகவும் செய்திகள் வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுக கூட்டணியில் பாமக என்பது வதந்தி. திமுக வலுவாக உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளும் உறுதியாக உள்ளன என தெரிவித்துள்ளார்
ADMK BJP Alliance
அதிமுக- பாஜக கூட்டணி
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், தி.மு.க. அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல; இரு முறை! 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன்.
அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அ.தி.மு.க.வையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.