MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிகன மழை ; கார்களை பாலத்தில் நிறுத்தணுமா? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!!

அதிகன மழை ; கார்களை பாலத்தில் நிறுத்தணுமா? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!!

Tamil Nadu Rain updates:தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்தில் அடுத்த 4-5 நாட்களுக்கு கனமழை பெய்யும்.  சென்னையில் இன்று முதல் டிசம்பர் 1 வரை மழை நீடிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Nov 26 2024, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rain in Chennai

Rain in Chennai

வடகிழக்கு பருவமழை தீவிரம்

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தென்கிழக்கு வங்கக்கடல்  நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் என்ன கூறி இருக்கிறார் என்று பார்க்கலாம்.
 

24
Rain in Tamil Nadu

Rain in Tamil Nadu

சென்னையில் 5 நாட்களுக்கு மழை

சென்னையில் இன்று தொடங்கும் மழை 4-5 நாட்களுக்கு நன்றாக நீடிக்கும். டெல்டா பகுதிகளான நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இன்று பெரிய நாளாக அமையும்.  கடலூர் பாண்டிக்கும் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். 

மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி  இலங்கைக்கு கீழாக அமைந்துள்ளது. வடக்கே பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. மெதுவாகச் செல்வது மற்றும் ஸ்தம்பிப்பது காரணமாக நவம்பர் 1ஆம் தேதி வரை அடுத்த 4-5 நாட்கள் தமிழக கடற்கரையோர பகுதிகளில் மழை பெய்யும் என கூறியுள்ளார்.

34
Cyclone

Cyclone

டிசம்பர் 1ஆம் தேதி வரை மழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில்  இன்று மழை ஆரம்பம். நல்ல மேகங்கள் நகர்கின்றன, சென்னையில் மழை 27 ஆம் தேதி முதல் டிச 1 வரை இருக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு கீழே கடற்கரையை தாண்டினால் வட  கடற்கரையை கடக்கும் போதும் மழை வரும். எனவே சென்னைக்கு அதிக மழை வாய்ப்பு இருக்கிறது. இன்று முதல் டிசம்பர் 1 வரை மழையை அனுபவியுங்கள் என கூறியுள்ளார். 

44
RAIN

RAIN

கார்களை பாலத்தில் நிறுத்தணுமா.?

கார்களை ப்ரிட்ஜ்ல நிறுத்தணுமா, லாட்ஜ்ல தங்கணுமா, சூப்பர் மார்க்கெட் எல்லாம் காலியாகணுமா - நான் அப்படி எதுவும் அட்வைஸ் பண்ணப்போவதில்லை என கூறியுள்ளார். மேலும் தற்போது சென்னைக்கு மழை தேவை, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டியில்  தண்ணீர் சேமிப்பு 15%, செம்பரம்பாக்கத்தில்  59% மற்றும் ரெட்ஹில்ஸ் 71% அளவு இருப்பதாக கூறியுள்ளார்.

எனவே  2025ல் சென்னைக்கு தண்ணீர் பிரச்சனை வருமா பதில் இல்லை. நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை எதிர்பார்க்கிறேன். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவடங்களில் இந்த வடகிழக்கு பருவமழையில் இதுதான் கடைசி கன மழை என கூறியுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி
Recommended image2
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!
Recommended image3
சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved