MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உங்க மாறுவேஷம் பலிக்காது! ஸ்டெர்லைட் பெயரை மாற்றி வைத்தால் மட்டும் திறக்க விட்டுடுவோமா? சொல்வது யார் தெரியுமா?

உங்க மாறுவேஷம் பலிக்காது! ஸ்டெர்லைட் பெயரை மாற்றி வைத்தால் மட்டும் திறக்க விட்டுடுவோமா? சொல்வது யார் தெரியுமா?

Sterlite: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 'பசுமைத் தாமிர ஆலை' என்ற புதிய பெயரில் திறக்க வேதாந்தா நிறுவனம் முயல்வதற்கு வேல்முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 13 2026, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தாமிர உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் என்ற பெயரை பசுமைத் தாமிர ஆலை என்று பெயர் மாற்றினால் , எங்கள் இரத்த சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா? என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் காட்டமாக பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

25
Image Credit : our own

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யக் குழு அமைப்பது குறித்த முயற்சிகளும், தமிழக மக்களின் மனங்களில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டு வாரியங்கள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது, இந்த விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை என்பது சாதாரண தொழிற்சாலை அல்ல. தூத்துக்குடி மக்களின் உடல் நலம், குடிநீர், நிலம், கடல் மற்றும் வாழ்வாதாரத்தை பாதித்த வரலாற்றுச் சோகத்தின் நினைவுச்சின்னமாக உள்ளது. அந்த ஆலையை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் ஜனநாயக முறையில் போராடிய போது, அரசின் துப்பாக்கிச் சூட்டில், நமது இரத்த சொந்தங்கள் உயிரிழந்த துயரம் இன்னும் தமிழ்நாட்டின் மனச் சாட்சியில் அழியாமல் நிற்கிறது.

Related Articles

Related image1
காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
Related image2
ஒரே அறிவிப்பில் இபிஎஸ்-ஐ காலி செய்த முதல்வர் ஸ்டாலின்... இனி மகளிர் உரிமை ரூ.2000! குஷியில் இல்லத்தரசிகள்..
35
Image Credit : our own

இந்த நிலையில் எந்தக் காரணத்திற்காகவும் “பசுமைத் தாமிர ஆலை” என்றப் பெயரில் இருந்தாலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழு அமைப்பதோ, மறைமுக நடவடிக்கைகளை தொடங்குவதோ, தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தமிழ்நாடு அரசு நிறுவன நலனுக்காக இயங்காமல், மக்களின் உயிர் பாதுகாப்புக்காக இயங்குவது தான் முதன்மையான அரசியல் கடமையாகும்.

45
Image Credit : our own

அதன்படி, “ பூட்டப்பட்ட ஆலை” என்ற நிலை மட்டும் போதுமானதல்ல. எதிர்காலத்தில் எந்த அரசும் மீண்டும் திறக்க முடியாத வகையில், அங்கு உள்ள கட்டிடங்கள், இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி அமைப்புகள் அனைத்தையும் சட்டபூர்வமாக முற்றிலும் அகற்றி, அந்த நிலத்தைப் பொதுநலப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமும், சரியான நீதியும் ஆகும். போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவுகளை மதிப்பதும், மக்களின் போராட்ட உணர்வை காப்பதும், தமிழ்நாடு அரசின் வரலாற்றுப் பொறுப்பாகும்.

55
Image Credit : F/Velmurugan

எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான எந்த முயற்சிக்கும் இடமளிக்காமல், அதை நிரந்தரமாக அகற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள, தமிழ்நாடு அரசையும், சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசு அமைப்புகளையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு அரசு
தூத்துக்குடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தோல்வி பயம்.. முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? விளாசும் இபிஎஸ்
Recommended image2
விசில் ஒலியால் பயந்த ஸ்டாலின்.. பெண்களுக்கு ரூ.5,000 வழங்கியதன் பின்னணி.. விஜய் சொன்ன 'அந்த' வார்த்தை!
Recommended image3
காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
Related Stories
Recommended image1
காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
Recommended image2
ஒரே அறிவிப்பில் இபிஎஸ்-ஐ காலி செய்த முதல்வர் ஸ்டாலின்... இனி மகளிர் உரிமை ரூ.2000! குஷியில் இல்லத்தரசிகள்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved