MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விசில் ஒலியால் பயந்த ஸ்டாலின்.. பெண்களுக்கு ரூ.5,000 வழங்கியதன் பின்னணி.. விஜய் சொன்ன 'அந்த' வார்த்தை!

விசில் ஒலியால் பயந்த ஸ்டாலின்.. பெண்களுக்கு ரூ.5,000 வழங்கியதன் பின்னணி.. விஜய் சொன்ன 'அந்த' வார்த்தை!

தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 13 2026, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : Asianet News

மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.3,000 மகளிர் உரிமைத் தொகை, கோடை கால சிறப்புத் தொகுப்பு ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தேர்தலை காரணம் காட்டி டெல்லி கூட்டமும், அடிமை கூட்டமும் மகளிர் திட்டத்தை தடுத்து நிறுத்த சூழ்ச்சி செய்கிறது. இதனால் திமுக அரசு முந்திக்கொண்டு மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே போட்டுள்ளதாகவும், அடுத்ததாக அமையும் திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

23
தவெக தலைவர் விஜய் கேள்வி
Image Credit : Asianet News

தவெக தலைவர் விஜய் கேள்வி

இந்த நிலையில், புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 அறிவித்தது ஏன்? இந்த ஆண்டு மட்டும் தான் கோடை காலம் வருகிறதா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?

விசில் சின்னத்தால் பயந்த ஸ்டாலின்

இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். 

இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.

Related Articles

Related image1
காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
Related image2
"500-ம் அல்ல... 1000-ம் அல்ல... நேரடியாக ரூ.5000! மகளிர் உரிமைத் தொகையில் நடந்த அதிரடி மாற்றம்!"
33
உரிமைத் தொகையை சந்தோஷமாக வாங்குங்கள்
Image Credit : tndipr

உரிமைத் தொகையை சந்தோஷமாக வாங்குங்கள்

அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார். 

எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

அரசியல் ஆதாயம்

நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி'' என்று கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
மகளிர் உரிமைத் தொகை
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
Recommended image2
ஒரே அறிவிப்பில் இபிஎஸ்-ஐ காலி செய்த முதல்வர் ஸ்டாலின்... இனி மகளிர் உரிமை ரூ.2000! குஷியில் இல்லத்தரசிகள்..
Recommended image3
"500-ம் அல்ல... 1000-ம் அல்ல... நேரடியாக ரூ.5000! மகளிர் உரிமைத் தொகையில் நடந்த அதிரடி மாற்றம்!"
Related Stories
Recommended image1
காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
Recommended image2
"500-ம் அல்ல... 1000-ம் அல்ல... நேரடியாக ரூ.5000! மகளிர் உரிமைத் தொகையில் நடந்த அதிரடி மாற்றம்!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved