MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இரண்டு நாட்கள் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் சூப்பர் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!

இரண்டு நாட்கள் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் சூப்பர் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!

வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 05 2025, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், தொடர் விடுமுறை போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் பவுர்ணமி, அமாவாசை போன்ற விஷேச நாட்களில் பொதுமக்கள் சிரமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களிலும்  சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை வெளியாகிறது. அதன்படி வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

26
Tamil Nadu government transport

Tamil Nadu government transport

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:  மார்ச் 7ம் தேதி வெள்ளிக்கிழமை, 8ம் தேதி சனிக்கிழமை, 9ம் தேதி ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

36
weekend special buses

weekend special buses

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 7ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 265 பேருந்துகளும், 08ம் தேதி சனிக்கிழமை 270 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

46
Government bus

Government bus

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓருர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச்  07ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 51 பேருந்துகளும்,  08ம் தேதி சனிக்கிழமை அன்று 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து 07 அன்று 20 பேருந்துகளும், 08 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது.

56
SETC

SETC

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

66
special bus booking

special bus booking

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8.490 பயணிகளும் சனிக்கிழமை 3,058 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,347 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image2
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் அறிவிப்பு
Recommended image3
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved