MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK : பண மோசடி செய்து எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி... சினிமா பாணியில் சேஸ் பண்ணி கைது செய்த போலீஸ் - பின்னணி என்ன?

TVK : பண மோசடி செய்து எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி... சினிமா பாணியில் சேஸ் பண்ணி கைது செய்த போலீஸ் - பின்னணி என்ன?

TVK Party Member Arrested : புதுக்கோட்டையில் 100-க்கும் மேற்பட்டோரிடம், அதிக வட்டி தருவதாகக் கூறி 25 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, தவெக நிர்வாகி சரவணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : May 12 2026, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK Party Member Arrested
Image Credit : X

TVK Party Member Arrested

புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாகவே பெரும் பரபரப்பு நிலவி வந்தது. காரணம், 100-க்கும் மேற்பட்டோரிடம் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக எழுந்த புகார் தான். இந்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஒருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சரவணன். இவர் புதுக்கோட்டை நகரின் திருவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மோசடி செய்த சரவணன்
Image Credit : X

மோசடி செய்த சரவணன்

போலீஸ் வட்டாரங்கள் தரும் தகவல்படி, சரவணன் கடந்த பல ஆண்டுகளாக புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தனியாரிடம் கடன் வாங்குபவர்களிடமிருந்து பெருமளவில் பணம் வசூல் செய்துள்ளார். ஒவ்வொருவரிடமிருந்தும் 30 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை பணம் பெற்றிருக்கிறார். அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்து இந்தப் பணத்தை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. சில சமயங்களில், தனது தாயாரின் உடல்நலக்குறைவு போன்ற தனிப்பட்ட காரணங்களைக் கூறியும் பணம் வாங்கியுள்ளார்.

Related Articles

Related image1
கல்வி அமைச்சர் லெஃப்ட் பாண்டி..,! தேனி தவெக நிர்வாகியின் அலப்பறைக்கு அளவே இல்லையா?
Related image2
அடிதூள்... தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன்! போலீஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!
34
சரவணன் தலைமறைவு
Image Credit : ANI

சரவணன் தலைமறைவு

இப்படி, மொத்தமாக 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துவிட்டு, முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களாக சரவணனை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, ஆளுங்கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சரவணன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிடுவாரோ என்று பயந்து, பாதிக்கப்பட்டவர்களில் பலர் கடந்த பத்து நாட்களாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

44
சேஸ் பண்ணி பிடித்த போலீஸ்
Image Credit : our own

சேஸ் பண்ணி பிடித்த போலீஸ்

இந்தப் புகார்களின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெளிமாநிலத்தில் பதுங்கியிருந்த சரவணனைக் கைது செய்தனர். பின்னர், அவரை புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

சரவணன் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும், பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. கூடியிருந்தவர்களில் சிலர், "அவனை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று ஆவேசமாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தினரை சமாதானப்படுத்தி, சரவணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் உறுதியளித்தனர். மேலும், அவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் பலர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலேயே தொடர்ந்து முகாமிட்டதால், அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சட்டப்பேரவையில் அரங்கேறிய அரசியல் நாகரிகம்: முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து!
Recommended image2
TN Politics: 60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்.. ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்!
Recommended image3
Now Playing
முதல்வர் விஜய் குறித்து பிரேமலதா விஜயகாந்த் முக்கிய கருத்து! | DMDK Premalatha on CM Vijay
Related Stories
Recommended image1
கல்வி அமைச்சர் லெஃப்ட் பாண்டி..,! தேனி தவெக நிர்வாகியின் அலப்பறைக்கு அளவே இல்லையா?
Recommended image2
அடிதூள்... தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன்! போலீஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved