சினிமா மிஞ்சும் சம்பவம்! ரன்னிங் சேசிங்! என்கவுண்டர்! கண்டெய்னர் உள்ளே இருந்தது என்ன? பரபரப்பு தகவல்!
Trissur ATM Robbery Gang Arrest: நாமக்கல்லில் வாகனங்களை இடித்துவிட்டுச் சென்ற கண்டெய்னர் லாரியை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்தனர். லாரியில் இருந்த கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் 2 கார்கள், 4 இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளி விட்டு வடமாநிலத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சினிமா பாணியில் கண்டெய்னர் லாரியை விரட்டி சென்றுள்ளனர். இதை எதையும் பொருட்படுத்தாமல் கண்டெய்னர் லாரியை அசுர வேகத்தில் இயக்கி தப்பிக்க முயற்சித்தனர்.
இதையும் படிங்க: School Student: காலாண்டு விடுமுறையை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்பான செய்தியை சொன்ன பள்ளி கல்வித்துறை!
போலீசாரும் விடாமல் வெவ்வேறு வாகனங்களில் சேசிங் செய்தனர். சுமார் 30 இருசக்கர வாகனங்களில் போலீசார் லாரியை விரட்டிச் சென்றனர். இதனால் அப்பகுதியே பரபரப்பானது. இதனையடுத்து சன்னியாசிப்பட்டி பகுதியில் கண்டெய்னர் லாரி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, வாகனத்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட கும்பல் கடப்பாரை, கற்கள் வீசி போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தற்காப்புபாக்காக சுட்டதில் இருவர் மீது குண்டு பாய்ந்தது. இதில், ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தப்பியோடியுள்ளார். இரண்டு காவலர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில், இன்று அதிகாலை 3 எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் கேஸ் கட்டரை கொண்டு 65 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை காரில் பதுக்கி, அதனை கண்டெய்னர் லாரி மீது ஏற்றி 6 கும்பல் பயணம் செய்துள்ளது. இந்த கும்பல் நாமக்கல் பகுதியில் வந்த போது விபத்து ஏற்படவே, லாரியை நிறுத்தினால் சிக்கிக்கொள்வோம் என நினைத்து தொடர்ந்து பயணித்துள்ளது. பின் அதிகாரிகள் லாரியை மடக்கி இருக்கின்றனர் என்பது அம்பலமானது.
இதையும் படிங்க: Petrol Diesel Price: பெட்ரோல் டீசல் விலை குறைகிறது! எவ்வளவு தெரியுமா? வெளியாக போகும் அறிவிப்பு!
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சூர் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்டங்களை கண்டறிந்து அலர்ட் செய்துள்ளனர். அந்த சோதனையில் நாமக்கல் சுங்கச்சாவடியில் லாரி வந்தபோது, அவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர். இதனால் அடுத்தடுத்து தகவல் பரிமாறப்பட்டு லாரி பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிடிப்பட்ட கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம், லாரியில் உள்ளே கார் இருப்பதும் தெரியவந்தது.