MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்சி கிழக்கில் களம் இறக்கப்படும் நடிகை திரிஷா..? விஜய் வீட்டில் தீவிர ஆலோசனை..

திருச்சி கிழக்கில் களம் இறக்கப்படும் நடிகை திரிஷா..? விஜய் வீட்டில் தீவிர ஆலோசனை..

தவெக தலைவர் விஜய் தாம் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்துவிட்டு, திரிஷா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

1 Min read
Author : Velmurugan s
Published : May 04 2026, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வரலாறு படைத்த தமிழக வெற்றி கழகம்
Image Credit : X

வரலாறு படைத்த தமிழக வெற்றி கழகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தை மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்து வந்தன. பல்வேறு வழிகளில் முயற்சித்தும் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்கள் வாய்ப்பு வழங்கவில்லை. அதே போன்று நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டோரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இரு தொகுதிகளிலும் கெத்து காட்டும் விஜய்
Image Credit : Asianet News

இரு தொகுதிகளிலும் கெத்து காட்டும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தைத் தொடர்ந்து அதிமுக 66 தொகுதிகளிலும், திமுக 63 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இதில் தவெக தலைவர் விஜய் தாம் போட்டியிட்ட திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றியின் விழிம்பில் உள்ளார். விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பெரம்பூர் தொகுதி சென்னையில் அமைந்துள்ளதால் அதனை அவர் ராஜினாமா செய்யமாட்டாரென சொல்லப்படுகிறது.

Related Articles

Related image1
வெற்றியை நெருங்கும் தவெக... விஜய் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த திரிஷா
Related image2
CM Vijay: தமிழக முதலமைச்சர் விஜய்! பதவியேற்க நாள் குறித்த தளபதி! தேதி தெரியுமா?
33
திருச்சி கிழக்கில் திரிஷா..?
Image Credit : Gemini AI

திருச்சி கிழக்கில் திரிஷா..?

இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்துவிட்டு அந்த தொகுதியில் தமக்கு நிகரான நட்சத்திர வேட்பாளரைக் களம் இறக்க வாய்ப்பு உள்ளது. அப்படி பார்க்கும் பொழுது விஜய்யின் நெருங்கிய தோழியும், நலன் விரும்பியுமான நடிகை திரிஷா திருச்சி கிழக்கு தொகுதியில் களம் இறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்று தேர்தல் முடிவு வெளியாகும் நிலையில் அதிகாலையிலேயே திருப்பதி கோவிலுக்கு சென்ற திரிஷா சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு சென்னை வந்த திரிஷா நேரடியாக விஜய் வீட்டிற்கு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தேர்தல் முடிவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
"என்ன ஒன்னும் செய்ய முடியாது!" அரசு சம்பளத்தில் சொந்த கிளினிக்! கேமராவில் சிக்கியும் மிரட்டும் மருத்துவர்! 7 ஆண்டுகால பகல் கொள்ளை!
Recommended image2
Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!
Recommended image3
Vijay Government: மலிவு விலையில் MRI இருக்க.. ரூ.15 கோடிக்கு டெண்டரா? ரூ.100 கோடி வருவாய் இழப்பை தடுக்குமா விஜய் அரசு?
Related Stories
Recommended image1
வெற்றியை நெருங்கும் தவெக... விஜய் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த திரிஷா
Recommended image2
CM Vijay: தமிழக முதலமைச்சர் விஜய்! பதவியேற்க நாள் குறித்த தளபதி! தேதி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved