MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • BJP : ரவுடிகளை பாஜகவில் சேர்த்தது எல்.முருகன் காலத்தில் தான்.! தமிழிசைக்கு எதிராக களம் இறங்கிய திருச்சி சூர்யா

BJP : ரவுடிகளை பாஜகவில் சேர்த்தது எல்.முருகன் காலத்தில் தான்.! தமிழிசைக்கு எதிராக களம் இறங்கிய திருச்சி சூர்யா

கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது என தமிழிசையை விமர்சித்துள்ள திருச்சி சூர்யா தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம் என தெரிவித்துள்ளார்.  

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jun 09 2024, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பாஜக உட்கட்சி மோதல்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது.  அந்த வகையில் முன்னாள் மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சமூக வலைதளத்தில் கருத்து மோதல் அதிகரித்துள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பாஜக மூத்த தலைவர்கள் தொடர்பாக விமர்சித்து கருத்து தெரிவிக்கும் பாஜக ஐடி பிரிவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

25

தமிழிசைக்கு எதிர்ப்பு

இதனைத் தொடர்ந்து மோதல் போக்கு அதிகரிக்க தொடங்கியது. நீங்கள் மாநில தலைவர் அல்ல, எனவே செய்தியாளர்களுக்கு தமிழிசை பேட்டி அளிக்க கூடாது என விமர்சிக்க தொடங்கினர். ஆனால் தமிழிசையோ,  அண்ணாமலை தலைவராக இருந்த போது குற்றப் பின்னணி உள்ளவர்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். 
 

35

பாஜகவில் குற்ற பின்னணி

இந்த நிலையில் தமிழிசைக்கு பதலளித்து அண்ணாமலை ஆதரவாளர் திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், அக்கா வணக்கம், தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான் வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன். 

Annamalai : மத்திய அமைச்சராக பதவியேற்கிறார் அண்ணாமலை.? புதிய பாஜக மாநில தலைவர் யார்.?

45

பாஜகவில் சேர யாரும் வரவில்லை

கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம். அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா? பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா?

55

பதவிக்காக கட்சியில் இல்லை

இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னால் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம் என திருச்சி சூர்யா பதிவிட்டுள்ளார். 

Annamalai vs BJP: ஆணவம், திமிரால் சொந்த ஊரிலேயே அண்ணாமலை பெற்ற வாக்குகளை இது தான்.!!மீண்டும் சீறிய கல்யாணராமன்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தேர்தல் முடிவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image2
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் அறிவிப்பு
Recommended image3
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved