தமிழ்நாட்டில் உள்ள டாப் 10 மிகப்பெரிய ரயில் நிலையங்கள் என்னென்ன? அதன் பட்டியல் இதோ
Top 10 Railway Stations in Tamilnadu : தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் அதிக பிளாட்பார்ம் கொண்ட டாப் 10 ரயில்வே ஸ்டேஷன்கள் என்னென்ன என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம்.
Top 10 Railway Stations in Tamilnadu
ரயில் பயணங்கள் தான் சீப் அண்ட் பெஸ்ட் ஆக இருப்பதால், மக்கள் அதிகளவில் அதில் பயணிக்க முனைப்பு காட்டுகின்றனர். இதன் காரணமாக ரயில்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருக்கிறது. இங்கு மொத்தம் 532 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் டாப் 10 மிகப்பெரிய ரயில் நிலையங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
salem
10. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம்
தெற்கு ரயில்வேயின் ஒரு கோட்டமாக சேலம் உள்ளது. இந்த ரயில்நிலையத்தில் மொத்தம் ஆறு பிளாட்பார்ம்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 181 ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. சேலத்தில் இருந்து புறப்படக் கூடிய ரயில்கள் மொத்தம் 10, அதேபோல் சேலத்தில் முடியக்கூடிய ரயில்கள் மொத்தம் 11.
Vilupuram
9. விழுப்புரம் ஜங்க்ஷன்
டாப் 10 ரயில் நிலையங்கள் பட்டியலில் விழுப்புரம் ரயில் நிலையம் 9வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக ரயில் பாதைகள் வந்து சந்திக்கக்கூடிய ஒரு ரயில் நிலையமாக விழுப்புரம் ஜங்ஷன் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 6 பிளாட்பார்ம்கள் உள்ளன.
Coimbatore
8. கோயம்புத்தூர் ஜங்க்ஷன்
இந்த பட்டியலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையம் தான் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையமாகும். இந்த ரயில்நிலையத்தில் மொத்தம் 6 பிளாட்பார்ம்கள் உள்ளன. இங்கிருந்து மொத்தம் 37 ரயில்கள் புறப்படுகின்றது.
madurai
7. மதுரை ஜங்க்ஷன்
இந்த பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது மதுரை ஜங்க்ஷன் ரயில் நிலையம். முன்னதாக 6 பிளாட்பார்ம் இருந்த இந்த ரயில் நிலையத்தில் சமீபத்தில் கூடுதலாக ஒரு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டு 7 பிளாட்பார்ம்களுடன் இயங்கி வருகிறது.
Arakonam
6. அரக்கோணம் ஜங்க்ஷன்
டாப் 10 ரயில் நிலையங்கள் பட்டியலில் 6-வது இடத்தில் அரக்கோணம் ரயில் நிலையம் உள்ளது. மொத்தம் 8 பிளாட்பார்ம்கள் கொண்ட இந்த ரயில் நிலையத்தில் 116 ரயில்கள் நின்று செல்கிறது. இங்கு விரைவில் கூடுதலாக இரண்டு பிளாட்பார்ம்கள் அமைக்கப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்... ஒரே ஸ்டேஷன்ல 23 பிளாட்பார்மா! அதிக Platform கொண்ட டாப் 10 ரயில் நிலையங்கள்!!
Tambaram railway station
5. தாம்பரம் ரயில் நிலையம்
இந்த படியலில் 5வது இடத்தில் தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு மொத்தம் 8 பிளாட்பார்ம்கள் உள்ளன. இங்கு சராசரியாக 72 ரயில்கள் நின்று செல்கின்றன. இதுதவிர 14 ரயில்கள் இங்கிருந்து பயணத்தை தொடங்குகின்றன.
chengalpattu
4. செங்கல்பட்டு ரயில் நிலையம்
டாப் 10 ரயில் நிலையங்கள் பட்டியலில் செங்கல்பட்டு ரயில் நிலையம் தான் நான்காம் இடத்தில் உள்ளது. மொத்தம் 8 நடைமேடைகள் கொண்ட இந்த ரயில் நிலையத்தில் 98 ரயில்கள் நின்று செல்கிறது.
Trichy
3. திருச்சி ரயில் நிலையம்
இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ள ரயில் நிலையம், திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம். இங்கு மொத்தம் 8 நடைமேடைகள் உள்ளன. இங்கு மொத்தம் 106 ரயில்கள் நின்று செல்கின்றன.
Chennai Egmore
2. சென்னை எக்மோர்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தான் இந்த பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 12 பிளாட்பாரங்கள் உள்ளன.
Chennai Central
1. சென்னை சென்ட்ரல்
டாப் 10 ரயில் நிலையங்கள் பட்டியலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 17 பிளாட்பாரங்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்... Vande Bharat Sleeper Coach: முதல் முறையாக வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்! என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?