Tomato And Onion Price : எகிறும் தக்காளி வெங்காயம் விலை! தமிழகம் முழுவதும் விரைவில்! வெளியான குட் நியூஸ்!
Tomato And Onion Price : வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் சமையலுக்குத் தேவையான இந்த இரண்டு பொருட்களின் விலை உயர்வு மக்களைப் பாதித்துள்ளது, அரசு விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சமையலுக்கு தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் எதையும் சமைக்க முடியாது. இந்த இரண்டும் அந்த அளவுக்கு முக்கியம்.
இதையும் படிங்க: Tamilnadu Heavy Rain: மக்களே உஷார்! இந்த 8 மாவட்டங்களில் ஏடாகூடமாக மழை பெய்யப்போகுதாம்!
அந்தளவிற்கு சமையலோடு இணைந்து சுவையை தருவது தக்காளியும் வெங்காயமும். சாம்பார் முதல் பிரியாணி சமைப்பது வரை தக்காளி, வெங்காயத்தின் பங்கு அதிகம். இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிடு, கிடுவென உயர்ந்து 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் காரணமாக ஓட்டல் முதல் வீடு வரை தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுள்ளது. தக்காளி உபயோகம் செய்வதும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு தீபாவளி உள்ளிட்ட அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில் தக்காளி, வெங்காயம் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதேபோல் ஆண்டுதோறும் பருவமழை காலம், வெள்ளம், வெயில் போன்ற காரணங்களால் தக்காளி, வெங்காய விலை உயருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: School Student: மாணவர்களுக்கு மதிய உணவு சீருடை வேண்டுமா? அப்படினா இது ரொம்ப முக்கியம்! பள்ளிக்கல்வித்துறை!
ONION
இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி, வெங்காயம் கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும் ஒரு கிலோ தக்காளி 49 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தக்காளி, வெங்காயம் ஒரு நபருக்கு அதிகபட்சம், 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் பேட்டியளிக்கையில்: தக்காளி, வெங்காயம் விலையை கட்டுக்குள் வைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் பசுமை பண்ணை மூலம் விலை ஏற்றத்தை அரசு தடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பசுமை பண்ணையை விரிப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.