50 ரூபாய்க்கு இத்தனை கிலோ தக்காளியா.!! காய்கறி சந்தையில் அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்
தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சமீபத்தில் அதிகரித்த நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், வெங்காயம் 35 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
tomato onion
உயர தொடங்கிய விலை
உண்ண உணவு தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் முக்கிய தேவையாகும், அதற்காகத்தான் ஓடி ஓடி உழைக்கிறார்கள். எனவே உணவு பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் என்ன தான் உழைத்தாலும் சம்பளத்தை விட வேகமாக உணவு பொருட்களின் விலை உயர்கிறது. அந்த வகையில் காய்கறிகளின் விலை தற்போது உயரத்தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பனி காலம் என கூறப்படுகிறது. அதிகப்படியாக குளிர் நிலவுவதால் காய்கறிகள் செடிகளிலேயே பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தக்காளி, வெங்காயம் விலை
இந்த நிலையில் சமையலுக்கு முக்கிய தேவைப்படும் காய்கறிகளான தக்காளி மற்றும் வெங்காயமாகும், இந்த இரண்டு காய்கறிகளின் விலையும் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்தது. அந்த வகையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை எட்டியது. இதே போல பெரிய வெங்காயத்தின் விலையும் 120 ரூபாய் வரை சென்றது. இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் திணறினர். கிலோ கணக்கில் வாங்கி செல்லும் மக்கள் அரைக்கிலோ, ஒரு கிலோ என்ற அளவிலே வாங்கினர். இதனையடுத்து பொதுமக்களின் நலன் கருதி தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தது.
தக்காளி விலை என்ன.?
இதன் படி பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் வெங்காயத்தை ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல தமிழக அரசு சார்பாக பண்ணை பசுமை கடைகளில் தங்காளியின் விலையை குறைத்து வி்றபனை செய்யப்பட்டது. இருந்த போதும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உரியவகையில் சென்று சேரவில்லை. எனவே காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால் தான் விற்பனை விலை குறையும் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் தற்போது தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
வெங்காயத்தின் விலை என்ன.?
தக்காளியை பொறுத்தவரை மூட்டை மூட்டையாக வரத்து அதிகரித்துள்ளால் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 கிலோ தக்காளி 50 ரூபாய் என்ற அளிவில் கூவி கூவி கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயத்தின் விலையானது தற்போது 35 முதல் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் மற்ற பச்சை காய்கறிகளின் விலையானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
காய்கறிகளின் விலை என்ன.?
அதன் படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 12 முதல் 22 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Today
வெண்டைக்காய் விலை என்ன.?
அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 முதல் 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.