- Home
- Tamil Nadu News
- சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? கூடையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்
சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? கூடையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்
சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடை கூடையாக பச்சை காய்கறிகளை அள்ளி செல்கின்றனர்.

போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம் விலை
காய்கறிகள் தான் சமையலுக்கு ருசியை கொடுக்கும், அந்த வகையில் தக்காளி, வெங்காயம் இல்லாமல் டேஸ்டாக உணவு சமைப்பது இயலாத காரியம், எனவே காய்கறி சந்தைகளில் மக்கள் எதை வாங்குகிறார்களோ இல்லையோ முக்கியமாக தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்கி செல்வார்கள். ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை இந்த இரண்டின் தேவையும் மிக அதிகம். எனவே தக்காளி, வெங்காயத்தின் விலை சரிந்திருந்தால் கூடை, கூடையாக வாங்கி செல்வார்கள். அதே நேரம் கடந்த சில மாதங்களாக தக்காளி வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது.
ஏறி இறங்கும் தக்காளி வெங்காயம் விலை
அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாயை தொட்டது. இதனால் கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் ஒரு கிலோ, அரைகிலோ அளவில் வாங்கி சென்றனர். இதனையடுத்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து மீண்டும் வெங்காயம், தக்காளி வரத்து அதிகரித்ததால் விலையானது குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிலோ தக்காளி 15 முதல் 20 ரூபாய்க்கும், வெங்காயம் விலை 25 முதல் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிகளவில் வாங்கி வருகிறார்கள்.
குறைந்தது காய்கறிகள் விலை
இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் குஷியாகியுள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி ஒரு கிலோ இவ்வளவு தானா.?
வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சரிந்தது பச்சை காய்கறிகள் விலை
வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது