- Home
- Tamil Nadu News
- மீண்டும் ஸ்டாலின்? இபிஎஸ்ஸை முந்தும் விஜய்.. சீமானுக்கும் ஷாக்.. புதிய கருத்துகணிப்பு முடிவு இதோ!
மீண்டும் ஸ்டாலின்? இபிஎஸ்ஸை முந்தும் விஜய்.. சீமானுக்கும் ஷாக்.. புதிய கருத்துகணிப்பு முடிவு இதோ!
TN Assembly Election 2026: திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற கொங்கு மண்டலம் முக்கிய காரணமாக இருக்கும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. விஜய்யும் இதில் முக்கிய பங்கு வகிப்பார் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த அனைத்துக் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று லோக்பால் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்
அதாவது லோக்பால் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 40.1% வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 181 இடங்கள் முதல் 189 வரையிலான இடங்கள் வரை பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை 38 இடங்கள் முதல் 42 இடங்கள் வரையில் கைப்பற்றும் என்றும் 29% வாக்குகளை அறுவடை செய்யும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 8 முதல் 10 இடங்களை கைப்பற்று என்றும் சுமார் 23.9% வாக்குகளை தவெக பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கொங்கு மண்டத்தில் கால்பதிக்கும் திமுக
அதே வேளையில் சீமானின் நாம் தமிழர் கட்சி 4.9% வாக்குகளை பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி வராது எனவும் லோக்பால் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது. திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற கொங்கு மண்டலம் முக்கிய காரணமாக இருக்கும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதாவது அதிமுகவின் பாரம்பரிய கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக 44 முதல் 46 இடங்கள் வரையில் கைப்பற்றும் என்றும் அதிமுக 9 இடங்கள் முதல் 10 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது,.
டெல்டா, தென்மாவட்டங்களில் அதிமுக நிலை என்ன?
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என வடக்கு மண்டலத்தைப் பொறுத்தளவில் திமுக 53 இடங்கள் முதல் 56 இடங்கள் வரை பெரும் என்றும் அதிமுக 11 இடங்கள் முதல் 12 இடங்கள் வரை பெறும் என்றும் தவெக 2 முதல் 3 இடங்கள் வரை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரையில் திமுக 40 இடங்கள் வரை கைப்பற்றும். அதிமுக கூட்டணி 10 இடங்கள் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி என தெற்கு மண்டலமான தென் மாவட்டங்களை பொறுத்த அளவில் திமுக கூட்டணி 45 முதல் 47 இடங்கள் வரை பெறும் என்றும் அதிமுக கூட்டணி 9 இடங்கள் முதல் 10 இடங்கள் வரை பெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இபிஎஸ்ஸை முந்திய விஜய்
இந்த கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக 41% பேர் ஆதரவு தெரிவித்தனர். தவெக தலைவர் விஜய் முதல்வராக 27.1% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக 24.1% சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜய் முதல்வராக எடப்பாடி பழனிசாமியை விட சுமார் 3% அதிக ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகணிப்புகள் பலிக்குமா?
சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் மக்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளில் நான்கு மண்டலம் மண்டலங்களாக பிரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது தேர்தலுக்கு முன்பாக கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுவது என்பது இயல்பான ஒன்றுதான் இந்த கருத்து கணிப்புகள் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியை தீர்மானிப்பதில்லை. ஏனெனில் சில கருத்துக்கணிப்புகள் முன்னரே சொல்லப்பட்டபடி நடக்கும். ஆனால் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் நடக்காமல் போய்விடும்.
மே 4ம் தேதி தான் உண்மையான ரிசல்ட்
மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்று தான் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றுமா? முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அரியணையில் ஏறுவாரா? இல்லை திமுகவிடமிருந்து அதிமுக ஆட்சியை தட்டிப் பறிக்குமா? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பாரா? இல்லை தவெக தலைவர் விஜய் அரசியலில் அதிசயம் நிகழ்த்தி முதல்வர் அரியணையில் ஏறி வரலாற்று சாதனை படைப்பாரா ? இல்லை நாம் தமிழர் கட்சி தமிழக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது தெரியவரும்.

