MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முதல்வர் ஸ்டாலின் முதல் சீமான் வரை; வாழ்த்து மழையில் ரஜினி; புகழ்ந்து தள்ளிய விஜய்!

முதல்வர் ஸ்டாலின் முதல் சீமான் வரை; வாழ்த்து மழையில் ரஜினி; புகழ்ந்து தள்ளிய விஜய்!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்களும் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

2 Min read
Rayar r
Published : Dec 12 2024, 11:03 AM IST| Updated : Dec 12 2024, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Super Star Rajinikanth Birthday

Super Star Rajinikanth Birthday

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் ஆகியோரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 

எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்.

 

24
EPS wishes Rajinikanth

EPS wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 

தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும் என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் ர‌ஜினிகாந்த் இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.

தவெக தலைவர் விஜய் 

பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ராஜ வாழ்க்கை வாழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

34
Seeman and Rajinikanth

Seeman and Rajinikanth

மநீம தலைவர் கமல்ஹாசன் 

அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 

எவரையும் கவர்ந்திழுக்கும் ஈர்ப்புமிக்க நடிப்பாற்றலாலும், தனித்துவமிக்க நடை, உடை, பாவனைகளாலும், நேர்த்தியான உடல்மொழியாலும் மக்கள் மனதை வென்று, இந்தியத் திரையுலகை தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த திரை ஆளுமை!

திரைத்துறையில் இருந்த நிற ஆதிக்கத்தை உடைத்துத் தகர்த்து, தனது ஆகச்சிறந்த நடிப்பால் அனைவரையும் தன்வசப்படுத்தி, திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம்! காலங்கடந்தும் ரசிக்கும்படியான நடிப்பினைக் கொடுத்து, மூன்று தலைமுறையினரை மகிழ்வித்த ஆகப்பெரும் திரைக்கலைஞர்!

பணம், புகழ், பெயர், செல்வாக்கு என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டாலும், அவற்றைத் துளியும் தலைக்கேற்றாது பணிவோடும், திறந்த மனதோடும் எல்லோரையும் அணுகும்  தன் நிலை எந்நாளும் மாறாத பெருமகன்! பெருமதிப்பிற்குரிய ரஜினிகாந்த்துக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

44
Rajinikanth Networth

Rajinikanth Networth

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 

நடிகர் நண்பர் ரஜினிகாந்த் இன்று 75ம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 

எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

சூப்பர்ஸ்டார் பட்டம் ஒன்னும் ரஜினிக்கு சும்மா கிடைக்கல; அதன் பின்னணி தெரியுமா

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved