- Home
- Tamil Nadu News
- தத்தளிக்கும் நெல்லை.. அவசரமா? 1077-க்கு ஒரு போன் போடுங்க! மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில்...
தத்தளிக்கும் நெல்லை.. அவசரமா? 1077-க்கு ஒரு போன் போடுங்க! மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில்...
Tirunelveli நெல்லையில் கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட். அவசர உதவிக்கு 1077 மற்றும் வாட்ஸ்அப் எண்களைத் தொடர்பு கொள்ளவும். டிஎன் அலர்ட் செயலி விவரம் உள்ளே.

Tirunelveli கனமழை எச்சரிக்கை: ஆரஞ்சு அலர்ட்
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' (Orange Alert) விடுத்துள்ளது. மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
மழையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவசரத் தேவைகளுக்காக, பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் அவசரக் கட்டுப்பாட்டு மையம் (Disaster Emergency Control Center) அமைக்கப்பட்டுள்ளது.
அவசர உதவி எண்கள் அறிவிப்பு
பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்குக் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
• கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077
• அலுவலக எண்: 0462-2501070
• வாட்ஸ்அப் எண் (வணக்கம் நெல்லை): 97865 66111
டிஎன் அலர்ட் (TN Alert) செயலி
வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, பொதுமக்கள் அனைவரும் தங்கள் கைபேசியில் 'TN Alert App'-ஐ பதிவிறக்கம் செய்யுமாறு செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் மழை நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை எளிதாகப் பெற முடியும்.

