MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தீபாவளிக்கு தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.. குடையை மறக்காதீங்க மக்களே

தீபாவளிக்கு தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.. குடையை மறக்காதீங்க மக்களே

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அக்டோபர் 19 முதல் 22 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Oct 19 2025, 07:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
19–22 அக்டோபர் வானிலை அப்டேட்
Image Credit : our own

19–22 அக்டோபர் வானிலை அப்டேட்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 19-22 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை, இடியுடன் கூடிய மின்னல், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாடு வானிலை

சென்னையுடன் சேர்ந்து புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை நிலவவுள்ளது. கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தீபாவளி தினத்தில் மழை கொட்டும்

அக்டோபர் 20, தீபாவளி தினத்திலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய லேசனானது முதல் மிதமானது மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
22
தமிழகத்தில் தொடரும் கனமழை
Image Credit : our own

தமிழகத்தில் தொடரும் கனமழை

அக்டோபர் 21 மற்றும் 22 நாட்களில், தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடியது லேசானது முதல் மிதமான மழை பெய்யும். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

எங்கெல்லாம் மழை பெய்யும்?

22-ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

சென்னையில் வானிலை மற்றும் வெப்பநிலை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசனானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸ் வரை, குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Related image1
விடாமல் மழை ஊத்து ஊத்துன்னு ஊத்த போகுதாம்! எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!
Related image2
சென்னையை தும்சம் செய்யப்போகுதாம் மழை! டெல்டா, தென் மாவட்டங்களுக்கு வெதர்மேன் கொடுத்த வார்னிங்!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
சென்னை
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
Recommended image2
Now Playing
“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!
Recommended image3
AIADMK: விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா
Related Stories
Recommended image1
விடாமல் மழை ஊத்து ஊத்துன்னு ஊத்த போகுதாம்! எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!
Recommended image2
சென்னையை தும்சம் செய்யப்போகுதாம் மழை! டெல்டா, தென் மாவட்டங்களுக்கு வெதர்மேன் கொடுத்த வார்னிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved