MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அன்றே சொன்னேன் கேட்டாரா இபிஎஸ்? அதிமுகவின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்! KCP விளாசல்!

அன்றே சொன்னேன் கேட்டாரா இபிஎஸ்? அதிமுகவின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்! KCP விளாசல்!

Edappadi Palanisamy: தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பான்மை பெறாத நிலையில், அதிமுகவின் தற்போதைய நிலைக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : May 07 2026, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
Image Credit : Asianet News

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் திணறி வருகிறார். இந்நிலையில் அன்றே நான் சொன்னதை கேட்டு அதிமுகவை ஒன்றுப்படுத்தியிருந்தால் எடப்பாடிக்கும் இந்த நிலை வந்திருக்காது என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

25
கே.சி.பழனிசாமி விளாசல்
Image Credit : Asianet News

கே.சி.பழனிசாமி விளாசல்

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: 2024 ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கினால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க முடியும். என்று நான் கருத்து தெரிவித்திருந்தேன். எல்லா அதிமுக தொண்டர்களும் மிகப்பெரிய வரவேற்பையும், ஆதரவையும் அதற்கு அளித்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

Related Articles

Related image1
Vijay : அங்குட்டு ஆளுநர்... இங்குட்டு ஸ்டாலின்; நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஜய் - தவெக-வுக்கு செக் வைத்த திமுக..!
Related image2
TVK - AIADMK: தவெகவுக்கு ஆதரவா? சி.வி.சண்முகம் கன்ட்ரோலில் 40 எம்எல்ஏக்கள்? அதிமுக - திமுக கூட்டணியா?
35
திமுகவை கூட்டணிக்கும் அழைக்கும் அதிமுக
Image Credit : Asianet News

திமுகவை கூட்டணிக்கும் அழைக்கும் அதிமுக

ஆனால் இன்று எடப்பாடியால் புறக்கணிக்கப்பட்டவர்கள் திமுகவிலும், தவெகவிலும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தற்பொழுது எடப்பாடி தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று கூவி கூவி அழைத்தார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு திமுக எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தற்பொழுது அவர்களிடம் மன்றாடிகொண்டிருக்கிறார்.

45
பாண்டிச்சேரி பழனிசாமி
Image Credit : our own

பாண்டிச்சேரி பழனிசாமி

கட்சியில் இருந்த எல்லோரையும் திமுகவுக்கும், தவெகவுக்கும் அனுப்பி வைத்துவிட்டு இன்றைக்கு இதுபோன்ற முயற்சிகளை எல்லாம் செய்துகொண்டிருக்கிறார் . இதற்கு அன்றே நான் சொன்னதை கேட்டு அதிமுகவை ஒன்றுப்படுத்தியிருந்தால் அதிமுகவுக்கும் எடப்பாடிக்கும் இந்த நிலை வந்திருக்காது. கூவத்தூர் பழனிசாமியாக இருந்து எடப்பாடி பழனிசாமியாக மாறியவர் தற்போது பாண்டிச்சேரி பழனிசாமியாக மீண்டும் Resort கலாச்சாரத்திற்கு சென்றிருக்கிறார்.

55
இப்பொழுதாவது இபிஎஸ் திருந்த வேண்டும்
Image Credit : Google

இப்பொழுதாவது இபிஎஸ் திருந்த வேண்டும்

தலைமை கழகத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை ஒரு சிறிய அறையில் நடத்துகிற அளவு எண்ணிக்கை சுருங்கியிருக்கிறது. இப்பொழுதாவது இவர் திருந்த வேண்டும், இல்லையென்றால் தெரு ஓரங்களில் இருக்கும் கடைகளில் கூட்டம் நடத்துகிற அளவு எண்ணிக்கை சரியும். இவர் திருந்த வேண்டும் மறுத்தால் அதிமுக தொண்டர்கள் இவர்களை திருத்த வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
திமுக
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஆளுநர் மூலம் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி.! விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதிக்கும் எதிர்க்கட்சிகள்.!
Recommended image2
Now Playing
மதுரையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை ! பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு !
Recommended image3
Vijay : அங்குட்டு ஆளுநர்... இங்குட்டு ஸ்டாலின்; நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஜய் - தவெக-வுக்கு செக் வைத்த திமுக..!
Related Stories
Recommended image1
Vijay : அங்குட்டு ஆளுநர்... இங்குட்டு ஸ்டாலின்; நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஜய் - தவெக-வுக்கு செக் வைத்த திமுக..!
Recommended image2
TVK - AIADMK: தவெகவுக்கு ஆதரவா? சி.வி.சண்முகம் கன்ட்ரோலில் 40 எம்எல்ஏக்கள்? அதிமுக - திமுக கூட்டணியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved