MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்செந்தூர்- ராமேஸ்வரம் 3 நாட்கள் ஆன்மிக சுற்றுலா.! TTDC வெளியிட்ட புதிய சுற்றுலா அறிவிப்பு

திருச்செந்தூர்- ராமேஸ்வரம் 3 நாட்கள் ஆன்மிக சுற்றுலா.! TTDC வெளியிட்ட புதிய சுற்றுலா அறிவிப்பு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திருச்செந்தூர், ராமேஸ்வரம் மற்றும் உத்திரகோசமங்கை ஆகிய தலங்களுக்கு புதிய மூன்று நாள் ஆன்மிக சுற்றுலாவை அறிவித்துள்ளது. இந்தப் பயணத்தில் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் அடங்கும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 27 2025, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருச்செந்தூர் ராமேஸ்வரம் 3 நாட்கள் ஆன்மிக சுற்றுலா TTDC புதிய சுற்றுலா அறிவிப்பு

திருச்செந்தூர்- ராமேஸ்வரம் 3 நாட்கள் ஆன்மிக சுற்றுலா-TTDC புதிய சுற்றுலா அறிவிப்பு

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு கோயில்களை கொண்ட மாநிலமாக உள்ளது. அந்த வகையில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை வாழ்நாளில் ஒருநாளாவது சுற்றிப்பார்க்க வேண்டும், தரிசனம் செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான ஆன்மிக பக்தர்களின் கனவாக உள்ளது.

அந்த வகையில் எப்படி செல்வது.? பாதுகாப்பு வசதி.? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழும் அந்த வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆன்மிக சுற்றுலா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் புதிய ஆன்மிக சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா

தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா

புதிய சுற்றுலா திட்டம் தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 3 நாட்கள் திருச்செந்தூர், இராமேஸ்வரம். சுற்றுலா சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் இராமேஸ்வரம், சென்று திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

மேற்கண்ட சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் அமைந்து இருக்கும் திரு செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் சிறப்பு தரிசனம். 

34
உலகிலேயே முதல் கோயில்

உலகிலேயே முதல் கோயில்

உலகிலேயே முதலில் தோன்றிய முதல் கோவில் இராமநாதபுரத்தில் அமைந்து இருக்கும் உத்திரகோசமங்கை, மங்களநாதர் கோவிலில் சிறப்பு தரிசனம். தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு தரிசனம் இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் இதன் சிறப்பு அம்சம் ஆகும்.

மேலும் இச்சுற்றுலாவில் தனுஷ்கோடியினை சிறப்பு பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படும். 

44
சுற்றுலா பயண கட்டணம்.?

சுற்றுலா பயண கட்டணம்.?

இந்த சுற்றுலாவிற்கு அனைத்து செலவுகளையும் சேர்த்து ஒருவருக்கு 12ஆயிரத்து 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்களை  (180042531111) (Toll Free). 044-25333333 மற்றும் 044-25333444 தொடர்பு கொண்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK Vs CPM: ஆதரவை வாபஸ் பெறுவோம்.. தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை!
Recommended image2
CM Vijay Vs PM Modi: ஆபத்து! தமிழ்நாட்டிற்கு உடனே வேணும்.. விவசாயிகளுக்காக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்
Recommended image3
Now Playing
செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ED! முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved