MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இறுதிச் சடங்குகளில் வானத்தை நோக்கி சுடப்படும் குண்டுகள் உண்மையானவையா? அரசு மரியாதையின் ரகசியம் என்ன?

இறுதிச் சடங்குகளில் வானத்தை நோக்கி சுடப்படும் குண்டுகள் உண்மையானவையா? அரசு மரியாதையின் ரகசியம் என்ன?

Deva Funeral: காவல்துறையினர் 72 குண்டுகள் முழங்க தேனிசைத் தென்றல் தேவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்படி அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யும்போது காவலர்கள் சுடுவது உண்மையான குண்டுகளா? இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 20 2026, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தேனிசைத் தென்றல் தேவாவின் உடல் நல்லடக்கம்
Image Credit : Asianet News

தேனிசைத் தென்றல் தேவாவின் உடல் நல்லடக்கம்

தமிழ் திரையுலகில் தனது கானா பாடல்களாலும், தனித்துவமான மெலோடி இசையாலும் பல தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்த 'தேனிசைத் தென்றல்' தேவாவின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் தமிழக அரசு சார்பில் முழுமையான காவல்துறை மரியாதையுடன் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவல்துறையினர் 72 குண்டுகள் முழங்க கானா நாயகனுக்கு பிரியாவிடை அளித்தனர்.

தேவாவின் இறுதிச் சடங்கின் போது, காவலர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு வீரவணக்கம் செலுத்திய நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்தது. இந்தச் காட்சியைப் பார்த்த பலருக்கும் ஒரு பொதுவான சந்தேகம் மனதில் எழுவதுண்டு. அதாவது, "இறுதிச் சடங்குகளில் காவல்துறையினர் சுடும் அந்தத் தோட்டாக்கள் உண்மையான குண்டுகளா? பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இதுபோன்ற கூட்ட நெரிசலில், இதுபோல சுடுவது பாதுகாப்பானதா?" என்பதே அந்த சந்தேகமாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வெற்றுத் தோட்டாக்கள் தான்
Image Credit : x

வெற்றுத் தோட்டாக்கள் தான்

இந்தக் கேள்விக்கான எதார்த்தமான உண்மை என்னவென்றால், காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இதுபோன்ற மரியாதைச் சடங்குகளின் போது பயன்படுத்துவது எந்தவிதமான உலோகக் குண்டுகளும் இல்லாத 'வெற்றுத் தோட்டாக்கள்' (Blank Rounds / Blank Ammunition) மட்டுமே. இந்த வெற்றுத் தோட்டாக்களுக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து அறிந்துகொள்வது அவசியமாகும்.

வழக்கமான துப்பாக்கித் தோட்டாக்களில் குண்டு அல்லது ஈயப் பகுதி இருக்கும். ஆனால், இந்த வெற்றுத் தோட்டாக்களில் வெறும் துப்பாக்கி மருந்து (Gunpowder) மட்டுமே நைலான் அல்லது காகித மூடல்களால் அடைக்கப்பட்டிருக்கும். துப்பாக்கியை இயக்கும்போது இது வெடித்துப் பெருத்த சத்தத்தையும் புகையையும் மட்டுமே உருவாக்கும். எங்குமே எந்தப் பொருளையும் தாக்காது.

பாதுகாப்புக்காக இந்த நடைமுறை

தலைவர்கள் மற்றும் சாதனையாளர்களின் இறுதிச் சடங்குகளில் இந்த முறை பின்பற்றப்படுவதற்குக் காரணம் பாதுகாப்பு மட்டுமே. லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கவே இந்த வெற்றுத் தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகளாவிய ராணுவ மற்றும் காவல்துறை மரபுகளில், மறைந்த மாமனிதர்களுக்குச் செலுத்தப்படும் மிக உயர்ந்த மரியாதையின் குறியீடாக அரசு இறுதி மரியாதை சடங்கு காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

33
யாருக்கெல்லாம் அரசு இறுதி மரியாதை?
Image Credit : youtube + Gemini ai

யாருக்கெல்லாம் அரசு இறுதி மரியாதை?

சமூகத்திற்கு, கலைக்கு, அரசியலுக்கு மற்றும் நாட்டுக்குத் தொண்டாற்றிய மாபெரும் சாதனையாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் தலைவர்களின் மறைவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை வழங்கப்படுகிறது. யார் யாருக்கு அரசு மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதை மாநில அமைச்சரவை அல்லது அரசுதான் விதிமுறைகளின்படி முடிவு செய்கிறது.

மறைந்தவர்களின் சேவையை அரசு அதிகாரப்பூர்வமாகப் போற்றுவதை இது குறிக்கிறது. தேனிசைத் தென்றால் தேவா மட்டுமின்றி அண்மையில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் ஆகியோரின் உடல்களும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் சினிமா
காவல்
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுக்கும்! பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Recommended image2
Now Playing
ஆந்திரா, தெலங்கானாவிற்கு கனமழை எச்சரிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை வாய்ப்பு!
Recommended image3
Now Playing
தூத்துக்குடி V.O.C. துறைமுகத்திற்கு வருகை தந்தது 'MV Nawtabhum' பிரமாண்ட சரக்குக் கப்பல்!
Related Stories
Recommended image1
Deva Hit Song: ரஜினி – குஷ்பூ படத்துக்காக தேவா செய்த சம்பவம்.! சூப்பர் ஹிட் ஆன அந்தப் பாடல் எது தெரியுமா?
Recommended image2
Deva Net Worth : இசையமைப்பாளர் தேவா இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? அவரின் சொத்து மதிப்பு இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved