MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK Vijay: 108 தொகுதிகளில் வெற்றி.. ஆளுநருக்கு கடிதம் எழுதினார் விஜய்..!

TVK Vijay: 108 தொகுதிகளில் வெற்றி.. ஆளுநருக்கு கடிதம் எழுதினார் விஜய்..!

108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.

2 Min read
Author : Velmurugan s
Published : May 05 2026, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
108 தொகுதிகளில் தவெக வெற்றி
Image Credit : Asianet News

108 தொகுதிகளில் தவெக வெற்றி

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் உட்பட 16 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஆட்சி அமைக்க தேவையான இடங்கள்
Image Credit : Gemini AI

ஆட்சி அமைக்க தேவையான இடங்கள்

தவெகவைத் தொடர்ந்து திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழக சட்டமன்றத்தின் பலம் 234 என்ற நிலையில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாக பார்க்கப்பட்டது.

Related Articles

Related image1
எம்.ஜி.ஆரையே தூக்கி சாப்பிட்ட விஜய்.. தவெக 34.90% வாக்குகள்.. அட! திமுக, அதிமுக இவ்வளவுதானா?
Related image2
கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி... தவெக வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்த சோகம்..!
34
ஆளுநருக்கு விஜய் கடிதம்
Image Credit : Asianet News

ஆளுநருக்கு விஜய் கடிதம்

ஆனால் கட்சியின் தலைவர் விஜய் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழகத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய்யின் கடிதத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை திரும்புகிறார். விஜய்யின் கடிதம் தொடர்பாக மூத்த அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

44
பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி..?
Image Credit : Gemini AI

பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி..?

தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்று 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாமக, 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் பார்ட்டி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் விஜய் வெற்றிகரமாக 5 ஆண்டுகள் வெற்றியை நிறைவு செய்ய முடியும். முன்னதாக விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படுமென சொன்னதால் தவெக கூட்டணிக்கு பலரும் ஆதரவு வழங்கலாமென சொல்லப்படுகிறது.

மாற்று வழியாக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுகவில் 3ல் 1 பங்கு உறுப்பினர்களின் ஆதரவை விஜய் பெறும் பட்சத்தில் தவெக எந்தவித சிக்கலும் இன்றி 5 ஆண்டுகள் ஆட்சியை சிறப்பாக நடத்த முடியும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
தேர்தல் முடிவு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: மே 26ம் தேதி! தமிழகம் முழுவதும் நாளை 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!
Recommended image2
Crime News: அடங்காத மணிகண்டன்! அம்மாவுக்கு பிராக்கெட் போட்ட கையோடு 14 வயது பொண்ணுக்கு ஸ்கெட்ச்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Recommended image3
Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?
Related Stories
Recommended image1
எம்.ஜி.ஆரையே தூக்கி சாப்பிட்ட விஜய்.. தவெக 34.90% வாக்குகள்.. அட! திமுக, அதிமுக இவ்வளவுதானா?
Recommended image2
கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி... தவெக வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்த சோகம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved