MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • லாரி லாரியாக வந்திறங்கிய தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? போட்டி போட்டு வாங்கும் இல்லத்தரசிகள்

லாரி லாரியாக வந்திறங்கிய தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? போட்டி போட்டு வாங்கும் இல்லத்தரசிகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்திருந்த நிலையில் தற்போது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. . வெங்காயம் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Apr 22 2025, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Vegetable prices today : சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள். அந்த வகையில் எந்த சமையலாக இருந்தாலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் ருசியாக சமைக்க முடியாது. எனவே மற்ற காய்கறிகளை விட இந்த இரண்டு காய்களை வாங்க தான் மக்கள் அலைமோதுவார்கள்.

அந்த வகையில் இதன் விலையானது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டியது. இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் பயன்பாட்டை பெரும் அளவில் மக்கள் குறைத்தனர். எனவே இதன் விலையானது எப்போது குறையும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
tomato onion

tomato onion

ஏறி இறங்கும் தக்காளி விலை

அதற்கு பலன் அளிப்பது போல் அடுத்த சில வாரங்களிலேயே 100 ரூபாய்க்கு 6 முதல் 8 கிலோ வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதே போல வெங்காயத்தின் விளைச்சலும் அதிகமாக இருந்ததால் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த சில மாதங்களாக ஏறி இறங்கி வரும் தக்காளி, வெங்காயத்தின் விலையானது இன்னும் சில வாரங்களில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

35
Vegetable prices today

Vegetable prices today

பச்சை காய்கறிகளின் விலை

இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் தக்காளி 50 ரூபாய்க்கு 3 கிலோ விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனையாகிறது. இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் தற்போது குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய்  25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், 

45
vegetables

vegetables

முருங்கைக்காய், பீன்ஸ் விலை என்ன.?

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,கொத்தவரை ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

55
Vegetables Price Today

Vegetables Price Today

கேரட் விலை என்ன.?

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 39 ரூபாய்க்கும்,  முட்டைகோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும்,  கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25  ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
காய்கறி விலை
வெங்காயம்
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தக்காளி விலை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!
Recommended image2
Now Playing
இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
Recommended image3
Magalir Urimai Thogai: இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved