குறைந்தது தக்காளி, வெங்காயம் விலை.. கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கூடியதா.? குறைந்ததா.? இதோ தகவல்
காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்ததுள்ளது. அதே நேரத்தில் கேரட், அவரைக்காய், முருங்கைக்காய் விலையானது உச்சத்தில் உள்ளது.
சின்ன வெங்காயம் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 24 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சுரைக்காய் விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 64 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Koyembedu
முருங்கைக்காய் விலை நிலவரம்
பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய் விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 18 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள்