தொடங்கியது புரட்டாசி.... சரசரவென உயர்ந்த காய்கறிகளின் விலை..! கோயம்பேட்டில் வெங்காயம், தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
காய்கறி விலை என்ன.?
புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதன் காரணமாக அசைவ பிரியர்கள் தற்போது காய்கறி சார்ந்த உணவு வகைகளுக்கு மாறி உள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலையானது சற்று அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30, சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
vegetables
முருங்கைக்காய் விலை என்ன.?
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய், பாகற்காய் 20 ரூபாய், சுரைக்காய் 20 ரூபாய், பட்டர் பீன்ஸ் 90 ரூபாய், அவரைக்காய் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முட்டைகோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்குமு, கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இஞ்சி விலை என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 280 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்குத் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது