MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விலகியது வடகிழக்கு பருவமழை.! ஆனாலும் தென் மாவட்டங்களை விடாமல் துரத்தும் கன மழை- வானிலை மையம் அலர்ட்

விலகியது வடகிழக்கு பருவமழை.! ஆனாலும் தென் மாவட்டங்களை விடாமல் துரத்தும் கன மழை- வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் 104 நாட்கள் நீடித்த வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 வரை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 27 2025, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விலகியது வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களை விடாமல் துரத்தும் கன மழை

விலகியது வடகிழக்கு பருவமழை- தென் மாவட்டங்களை விடாமல் துரத்தும் கன மழை

விலகியது வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மத்தியில் தொடங்கியது. சுமார் 104 நாட்கள் நீடித்த பருவமழையால் பரவலாக நல்ல மழை கிடைத்தது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியது.

எனவே 2025ஆம் ஆண்டில் பெரிய அளவில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (27-01-2025) விலகியதாக சென்னை வானிலை ஆய்வு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தமிழகத்தில் வறண்ட வானிலை

தமிழகத்தில் வறண்ட வானிலை

 

இதனையடுத்து 27-01-2025 முதல் 29-01-2025   தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 30ஆம் தேதி  தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

34
விடாமல் துரத்தும் கன மழை

விடாமல் துரத்தும் கன மழை

வருகிற 31-01-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01-02-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
சென்னை வானிலை

சென்னை வானிலை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (28-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாடு வானிலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"?
Recommended image2
Now Playing
தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் கடன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?! எப்படி வாங்கலாம் தெரியுமா?!
Recommended image3
Now Playing
அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! - எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved