MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • RAIN : அடுத்த 3 மணி நேரத்திற்கு சம்பவம் காத்திருக்கு.! கொட்டித்தீர்க்க போகுது மழை- 27 மாவட்டங்களுக்கு அலர்ட்

RAIN : அடுத்த 3 மணி நேரத்திற்கு சம்பவம் காத்திருக்கு.! கொட்டித்தீர்க்க போகுது மழை- 27 மாவட்டங்களுக்கு அலர்ட்

வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கேரளா மற்றும் கர்நாடகவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Jul 16 2024, 08:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. இன்று 16.07.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

நீலகிரி, கோவையில் கன மழை

மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வருகிற 21.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 

34

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

44

27 மாவட்டங்களுக்கு அலர்ட்

இதனிடையே  இன்று காலை 10 மணி வரை  திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கனமழை
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
“விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்” - கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை!
Recommended image2
Now Playing
கடந்த திமுக ஆட்சியை போல தவெக அரசிலும் தொடரக் கூடாது ! முதல்வர் விஜய்யை எச்சரிக்கும் அண்ணாமலை !
Recommended image3
CM Vijay: பிரதமர் மோடியை, சந்தித்த முதல்வர் விஜய்..! மேகதாது, தமிழ்தாய் வாழ்த்து குறித்து விவாதிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved